அசுரர்களைக் கொன்ற
அப் பாவம் தீர
ஆறுமுகன் திருச்செந்தூரில்
அப்பன் சிவனைத் துதித்தான்;
தேவன் இந்திரன் தன் பெண்
தெய்வானையை,
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு
திருமணம் செய்துவித்தான்;
அதன் பின் முருகன்
வேடவப் பெண்
வள்ளியை மணம் செய்துகொண்டு
வள்ளி தெய்வானையோடு திருத்தணியில்
வாசிக்கலானான், தனை நாடி
வந்தோர்க்கெல்லாம் அருள்
வழங்கலானான் !
முருகா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
முத்துக் குமரா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
கந்தா உன்னைக் கண்டேன் - தந்தந்னா
கருணை வடிவாய்க் கண்டேன் - தந்தந்னா
மயிலின் மேலே கண்டேன் - தந்தந்னா
அந்த முகிலின் மேலும் கண்டேன் - தந்தந்னா
கடலின் மேலே கண்டேன் - தந்தந்னா
அந்த கரையின் மேலும் கண்டேன் - தந்தந்னா
அனைவருக்கும்
அருள் புரிவாய்
ஆறுமுகா !
விசு! புஸ்தகமா போடலாம். போற்றக்கூடிய பணி! வாழ்க
ReplyDeleteபொறுமையாப்
ReplyDeleteபடிச்சதுக்கும்
பாராட்டியதுக்கும்
பல கோடி நன்றி RVS !!!