Friday, September 23, 2016

நீதியைத்தேடி



பிறந்தேன்
பின் ஓடச்சொன்னார்கள்
ஓடினேன்
பள்ளி தேடி ஓடினேன்,
கல்வி தேடி ஓடினேன்,
பணம் இறைத்து பட்டம் பெற ஓடினேன்;
*
பின் இறைத்த  பணத்தை நிரப்ப ஓடினேன்
வேலை தேடி ஓடினேன், இடையில்
சேலை தேடி ஓடினேன்.

காதல் தேடி,
கன்னியர் தேடி ஓடினேன்;
*
எல்லாவற்றுக்கும் ஒருவிலை
இன்னும் இன்னும் என்றுஓடினேன்
பல நாடுகள் பறந்தோடினேன்;

எதை எதையோத் தேடி
எங்கெங்கோ ஓடினேன்,
எல்லை மறந்து ஓடி ஆடி வாடி
இன்று அமைதியாய்;
*
இதோ என் வாழ்க்கை முடியப் போகிறது,
இத்தனை நாள் ஓடியதெதற்கு எனத்தெரியாமல்
இன்று நிற்கிறேன், திரும்பிப்பார்க்கிறேன்

வாழ்க்கை என்றால் என்ன என்றெனைக் கேட்கிறேன்;

இதற்கு நான்மட்டுமா காரணம் என்றெண்ணிப் பார்க்கிறேன்;
*
நான் ஒடினேனா என்னைத் துரத்தினார்களா
எனக்குத் தெரியவேண்டும்,
இப்பொழுதாவது உண்மை புரியவேண்டும்;

வாழ்க்கையை மறக்கச்செய்து
வாழ்வென்றால் என்னவென்று உணர்த்தாது மறைத்து

எல்லாவற்றையும் வணிகமயமாக்கி
என்னை எங்களை வாழ விடாது செய்தவர் யார் ?
*
என்னிடம் நிதி நிறைய இருக்குறது.
ஆனால் நீதி வேண்டும்.

உங்களுக்கு 
உண்மை தெரிந்தால் சொல்லுங்கள், 
இல்லை
என்பின்னே வாருங்கள்.

இதோ ...
மீண்டும் ஓடுகிறேன் ...
நீதியைத்தேடி.

Tuesday, September 20, 2016

ஆமென்



காலை வேளையில்
கைகளை நன்றாய் வீசி
நடைப்பயிற்சி செய்வோரைப் பார்க்கும்போதெல்லாம்
*
ஒரு ஓரமாய் அமர்ந்து
தன் இஷ்டம்போல்
யோகாசனம் செய்து சுகிப்போரைப் பார்க்கும்போதெல்லாம்
*
மிதிவண்டியில் இங்குமங்கும்
மின்னல் போல் பயணித்து
மகிழ்வோரைப் பார்க்கும்போதெல்லாம்
*
நாலு ஐந்து மாடியாயினும்
சளைக்காமல் சரசரவென்று
ஏறி இறங்குவோரைப் பார்க்கும்போதெல்லாம்

கோபம் கோபமாய் வருகிறது.
*
பசித்தப்புலி இவர்களையும்
புசிக்கட்டும் என்று
சாபமிடத் தோன்றுகிறது.
*
வாழ்வை நீட்டிக்கவும்
வாழ்கையில் நலமாய் வாழவும்
இவர்கள் செய்யும் இச் சேட்டைகள்
விசித்திரமாய் இருக்கிறது.
*
அதேசமயம் 
என்னைச் சேர்ந்த
எவரும் இவ்வாறெல்லாம் செய்வதில்லை
என்பதை அறிந்து
மனம் அமைதிக்கொள்கிறது
*
ஆமென்.

Tuesday, September 13, 2016

என்ன பண்ணலா



மழை பத்தி எழுதியாச்சு
காதல் பத்தியும் எழுதியாச்சு
சிகப்பு கருப்பு நீலம் என்று
பல நிறங்கள் பற்றியும் எழுதியாச்சு
ஆண்டவன் பற்றியும் எழுதியாச்சு
அவன் ஆட்டிவிக்கும்
ஆட்டத்தைப் பற்றியும் எழுதியாச்சு
சரி மக்கள் என்ன எழுதுனா விரும்புவாங்கன்னு
யோசிச்சா,
அட நம்ப கூட இருக்குற ஒரு நாயுதாநண்பர்களுதா
நம்பள கண்டுக்கறதில்லையே,
என்ன பண்ணலா  .... ம்ம்ம்;