Wednesday, August 31, 2011

மதுராஷ்டகம் - வல்லபாச்சர்யா - 2 of 2

கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம் !
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 5 !!


கிருஷ்ணா,
நீ செய்பவைகள் இனிமை,
நீரில் நீ மிதப்பது இனிமை,
உன் திருட்டுத்தனம் இனிமை,
உன்னை என்னிக்கிடப்பது இனிமை,
நீ பேசினால் இனிமை,
உன் அமைதி இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;

குஞ்சா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீச்சி மதுரா !
சலீலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 6 !!


உன் குஞ்சலம் அழகு,
மாலை அழகு,
யமுனை நதி அழகு,
அந்த நதியில் ஆடும் அலைகள் அழகு,
நதியின் நீர் அழகு,
நீரில் மிதக்கும் தாமரை அழகு,
அழகுக்கெல்லாம் அரசனே, உன்னால்
எல்லாமே அழகு;

கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம் !
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 7 !!


கிருஷ்ணனோடு ஆடும் கோபியரெல்லாம் அழகு,
அங்கு அரங்கேறும் லீலைகலெல்லாம் அழகு,
கிருஷ்ணனோடு அவர்கள் ஐக்கியமாதல் அழகு,
அவர்கள் அடையும் ஆனந்தம் அழகு,
அவர்களைக் காண்பது அழகு,
அவர்களின் பணிவு அழகு,
அழகுக்கெல்லாம் அரசனே, உன்னை
அடைந்தோர் எல்லோரும் அழகு;

கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா !
தழிதம் மதுரா பழிதம் மதுரா
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 8 !!


அவனோடிருக்கும் கோபர்கள் இனிமை,
அவர்தம் கன்றுகள் இனிமை
கன்றுகளைக் காக்கும் அந்தக் கொம்பு இனிமை
அவர்களின் பிறப்பு இனிமை
அவர்கள் பழித்து விளையாடும் ஆட்டம் இனிமை
இனிமைகளின் அரசனே, உன்னால்
எல்லாமே இனிமை;

Tuesday, August 30, 2011

மதுராஷ்டகம் - வல்லபாச்சர்யா - 1 of 2

அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம் !
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 1 !!


கிருஷ்ணா,
உன் உதடுகள் இனிமை,
உன் முகம் இனிமை,
உன் பார்வை இனிமை,
உன் இதயம் இனிமை,
நீ சிரித்தால் இனிமை,
அழகான உன் நடை இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;

வச்சனம் மதுரம் சரிதம் மதுரம்
வசனம் மதுரம் வலிதம் மதுரம் !
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 2 !!


வார்த்தைகள் இனிமை, உன்
கதைகள் இனிமை, உன்
உடைகள் இனிமை, உன்
செயல்கள் இனிமை, உன்
எண்ணங்கள் இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;

வேனுர் மதுரோ ரேனுர் மதுரம்
பானிர் மதுரம் பாதோவ் மதுரம் !
ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 3 !!


புல்லாங்குழல் இனிமை, உன்
பாதங்களில் தூசி இனிமை,
கை இனிமை, கால் இனிமை, உன்
நாட்டியம் இனிமை,
நட்பு இனிமை,
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;

கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம் மதுரம் !
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம் !! 4 !!


பாடல் இனிமை, நீ
பருகுவது இனிமை,
உண்பது, உறங்குவது இனிமை,
உன் பார்வை இனிமை,
உன் நெற்றித் திலகம் இனிமை
இனிமைகளின் அரசனே, உன்
எல்லாமே இனிமை;

Monday, August 29, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.4

பெய்யுமாமுகில் போல்வண்ணா ! உன்றன்
   பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
   மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
   நோவநாங்க ளுரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
   சிற்றில்வந்து சிதையேலே


மழை தரும் கருத்த
முகிலின் நிறமொத்த
மாதவா, உன் பேச்சு,
மலர்ந்த தாமரை போன்றுன்
முகம் எல்லாம் எங்களை
மயக்கி
மகிழ்வித்தாலும்
உன் செயல் எங்களை
வருந்தவைக்கிறது; இருந்தும்
வானளந்த உத்தமா உன்
உள்ளம் வருந்த ஒரு
வார்த்தை கூட நாங்கள்
உரைக்க மாட்டோம்;
சிரீதரா, மண்ணாலான எங்கள்
சிறிய வீடுகளை வந்து
சேதப்படுத்தாதே;

Sunday, August 28, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.3

குண்டுநீருறை கோளரீ! மத
யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
கைகளாற்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள்
சிற்றில்வந்து சிடையேலே


வளமான நுண்ணிய மணல் கொண்டு,
வளையல் கைகளால் எங்களை
வருந்தி இந்த
வீடுகளை நாங்கள்
வடிவமைத்துள்ளோம்; முதலையின்
வாயில் சிக்கிக்கொண்ட
வாரணத்தை
விரைந்து சென்று
விடுவித்தவனே,
பாற்கடலில்
பள்ளி கொள்ளும்
பெருமானே, உன் ஓரப்
பார்வையில் எங்களைப்
பார்த்து அருள் புரி,
பாவை நாங்கள் உன் திருவடி
பணிகிறோம்; எங்கள்
சிற்றில்களை
சிதைக்காதிருக்க
வேண்டுகிறோம்;

Saturday, August 27, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.2

இன்றுமுற்றும் முதுகுநோவ
இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்ற எம்மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
கம்எழாததெம் பாவமே


நாராயணா,
நாள் முழுவதும்
நாங்கள் குனிந்து முதுகு
வலிக்க இச்சிறு
வீடுகள்
கட்டுகின்றோம்; அங்ஙனம்
கஷ்டப்பட்டு
கட்டிய வீட்டை எங்களைக்
காண, ரசிக்க விடு;
கட்டி முடிக்கும்முன்
கலைக்காதே;
குழந்தையாய் நீ ஆலிலையில்
கண்ணுறங்கும் போதே உன்னைக்
கண்டு உன்மேல் அன்பு
கொண்டு
எப்பொழுதும் உன்னையே
எண்ணி இருப்பவர்கள் நாங்கள்;
எங்கள் மேல் இறக்கம் கொள்ளாது
எங்களுக்கு அருள் செய்யாதிருக்க
என்ன பாவம் செய்தோமோ நாங்கள்.

Friday, August 26, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.1

நாமமாயிர மேத்த நின்ற
நாராயணாநர னேஉன்னை,
மாமிதன் மகனாகப்பெற்றா
லெமக்கு வாதை தவிருமே,
காமன்போதரு காலமென் றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்,
தீமை செய்யும் சிரீதரா!எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே



ஆயிரம் பெயர் கொண்டஆனந்த நாராயணனே,
மானுடனாய், எங்கள்
மாமியின்
மகனாய் இம்
மண்ணில் பிறந்தவனே, உன்
மாயை விளையாட்டுக்களிலிருந்து
தப்பிக்க முடியாது
தவிக்கிறோம் நாங்கள்;
மன்மதன் தன்னை
மகிழ்விக்கும்
மக்களுக்கு உதவும்
மாதம் என்பதால், அவனை
வேண்டி நாங்கள் இந்த
வண்ண வண்ண
வீடுகளை
வரைந்து
வழிபடுகிறோம்; எங்கள்
வேண்டுதலுக்கு இடையூறு
செய்யும் சிரீதரா, எங்கள்
சிறு வீடுகளைச்
சேதம்
செய்யாதே;

Thursday, August 25, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.10

கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக்
கழலினை பணிந்தங்கோர் கரியலற,
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே
.


கரும்பே வில்லும், மலர்க்
கணையும்
கொண்டிருக்கும்
காமதேவனைத் தொழுது,
பாகாசுரனின் வாயைப்
பிளந்த அந்த
பரமாத்மாவை அடைய வேண்டி,
பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரின்
பெண் கோதை
பாடிய இந்தப்
பாடல்களைப்
படிப்போர்
அந்தக் கண்ணன் திருவடிகளை
அடைந்து,
அவனுக்கு கைங்கரியம் செய்யும்
பாக்கியம்
பெறுவார்;

Wednesday, August 24, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.9

தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித்
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,
அழுதழு தலமந்தம் மாவழங்க
ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,
உழுவதோ ரெருந்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே.


தினம் மூன்று முறை
தூய மலர் வைத்துத்
துதிக்கின்றேன்
உன்னை;
உன் பெயர் சொல்லி
வணங்குகின்றேன்;
கடல் வண்ணன் அந்தக்
கண்ணனையே நான்
கணவனாகப் பெறாவிடில்
கரைந்து கலங்கி
காம தேவ எனக்கு
உதவாத
உன்மேல்
வருந்த நேரிடும்;
அது உண்ண உணவு
அருந்த நீர் ஏதும் தராது
அடித்தே காளை மாட்டைக் கொல்வது
அதுபோலாகும்;
அவ்வாறு
ஏதும் நேராது, பலி
ஏதும் உன்மேல் வராது,
என் கண்ணனிடம்
என்னைச் சேர்க்க
ஏது செய்வாய்;

Tuesday, August 23, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.8

மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு,
தேசுடைத் திறலுடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்


காதலால்
கட்டப்பட்ட
காளையரும்
கன்னியரும்
காமத்தில் இணையத் தன்
கரும்பு வில்லில் மலராலான
கணை செலுத்தி
கருணை செய்யும்
காமதேவா, அந்தக்
கருங்கடல் வண்ணன்
கண்ணபிரானை அடைய வேண்டி
கடும் நோன்பு இருந்து,
எண்ணை இடாது
என் கூந்தல் வாரிமுடியாது,
உடலில் அழுக்கேறி,
உணவு ஒரு முறை மட்டும்
உண்டு, அதனால்
உடல் மெலிந்து,
உதடுகள் வெளிற,
புவியில் மற்ற
பூவையரைப் போல் என்னை
அலங்கரித்துக் கொள்ளாது,
அந்தக் கேசவனின் பாதக்கமலங்களை
அடையவேக் காத்திருக்கும் என்
ஆசை பூர்த்தியாக
அருள்புரிவாய்;

Monday, August 22, 2011

எப்படி இருக்கே ?

எப்படி இருக்கே ?

எப்படி இருக்கே
என் பழைய காதலா ?
நலமா ?
நம் காதல்
எப்போவாச்சு
ஞாபகம் வருமா ?

உன்
உறவாகிப் போன நம்
உறவெல்லாம் நலமா ?

எப்பவும்
என்னை மொறச்சி மொறச்சி பார்க்கும்
எழுமலை அண்ணன்
எப்புடி இருக்கார் ?

காரணமே இல்லாமக்
கண் கலங்கும்
உன் அம்மா,
கட்டாந்தரையில்
நீச்சலடிக்க
பயப்படும் உன் தம்பி
இருவரும் நலமா ?

என்னை நீ அடிச்சதும்
உன்னை விட்டு ஓடி போன
உன் நாய்
வந்துச்சா திரும்பி ? பழகுதா ஓண்ட
விரும்பி ?

செத்ததெல்ல யாருன்னு
நீ சொல்லு;
பிழைச்சி இருக்குற
உறவெல்லாம்
நா சொல்றே;

ஓடிப்போன
ஒங்கக்கா புருச
திரும்பி வந்ததா கேள்விப்பட்டே,
அதெல்லா சரி,
கொண்டு போனத
கொண்டு வந்தாரா ?
கொஞ்சம் கூட
மிச்சம் வைக்காம
முழுதும் சொல்லிடு;

என் அக்கா மீண்டும்
முழுகாம இருக்கா,
நீ வெலகி இருந்தப்போ
இரண்டு பெத்தா;

தங்கச்சி புருச
தண்ணி போடுறா,
தட்டிக் கேட்டா
தடிய எடுக்கிறா,
தப்பு பண்ணிட்டோன்னு
தலைல
அடிச்சி
அழுவுறா
ஆத்தா.

இன்னு சொல்ல,
ஒன்ட கேட்க
ஏராளம் இருக்கு
என்ட;
ஏன் பிரிஞ்சோ
இன்னு புரியலே,
விடிஞ்சதெதற்குன்னு
தெரியலே,
விடியாம இருந்தா
நா அழுவுறது
ஊருக்கு தெரியாதில்லே.

ஒன்னே நெனச்சே
ஒத்தையிலே
ஒக்காந்து இருக்கே,
ஒ நெனப்புலியே
தவிச்சி போய் கிடக்கே;
ஒரே ஒரு முறை
என்னை பாக்க
வருவியா ?

Sunday, August 21, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.7

காயுடை நெல்லோடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே ! உன்னை வணங்குகின்றேன்
தேசமுன் னளந்தவன் திருவிக்கிரமன்
திருக்கைகளா லென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே


நெல் கரும்பு
வெல்லம்
அரிசி
அவல்
எல்லாம் உனக்கு நான்
படைத்திருக்கிறேன்;
உனக்குப் பிடித்த மந்திரம் சொல்லி
உன்னை வணங்குகிறேன்,
மன்மதா !
மூன்று உலகையும்
மூவடிகளால் அளந்த அந்த
உத்தமன் தன்
திருக்கரங்களால் எனைத்
தொட்டணைக்க,
அவனுக்காகவே
அவனியில் பிறந்த நான்
ஆனந்தப்பட,
அழியாப் புகழ் பெற்றே
நான்
நிலைத்திருக்கும்படி என்னை ஆசிர்வதி;

Saturday, August 20, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.6

உருவுடை யாரினை யார்கள் நல்லார்
ஒத்து வல்லார்களைக் கொண்டு, வைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனி நாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,
கருவுடை முகில்வண்ணன், காயாவண்ணன்
கருவினை போல்வண்ணன், கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டாய்.


காமதேவா,
ஏதும் அறியாக் கன்னி நான்;
என் பூஜையில்
ஏதாவது தவறு நேர்ந்ததோ ?
ஏன் கண்ணன் இன்னும்
எனக்கு அருளவில்லை ?
காம சாஸ்திரங்களை
கசடற அறிந்தவர்களோடு
கலந்தாலோசித்து
என் வழிமுறையில்
ஏதேனும் குறை இருப்பின் களைந்து
பங்குனியில் உத்திராட நட்சத்திரத்தில்
மீண்டும் விரதமிருப்பேன்; அவ் விரதமேற்று
என் எண்ணப்படி
என்னை அந்த அழகான,
கார்மேக வண்ணன்,
காயாம்பூ நிறம் ஒத்தவன்,
தாமரை போன்று கண்கள் கொண்ட அந்தக்
கண்ணன்
கண் திறந்துக்
காண,
ஆசிர்வதிக்க நீ
அருள வேண்டும்;

Friday, August 19, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.5

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி,
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே


தேவர்களுக்கென வேள்வியில்
தரப்பட்ட
திருப் பிரசாதம் காட்டில்
திரியும் நரி மோந்து, வாய் வைத்துத்
தின்பது ஏற்புடையதல்ல; அதுபோலே
உலகளந்த உத்தமன் ஒருவனுக்கே என்
உடல் உயிர் எல்லாம்; அதைவிடுத்து
வேறோர் மனிதனுக்கும் எனக்கும்
விவாகம் என்ற பேச்சு எழுந்தால் அவ்
வினாடியே உயிர்விடுவேன்,
மன்மதனே;

Thursday, August 18, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.4

சுவரில் புராணநின் பேரெழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே


காமதேவா,
உன் பெயர்
வீட்டுச் சுவரிலெல்லாம் எழுதி
உன் உருவம்
வரைந்து
உன் சேவை செய்யப்
பணிப்பெண்கள்
பலரோடு,
குதிரைகளும் கரும்பு
வில்லும்
உன் இரு புறமும்
வரைந்து
உனைக் குளிர்விக்கிறேன்;
இதற்காக நீ எனக்கு
உதவ வேண்டும்;
அந்த துவரகாபதிக்கே
என் எல்லாம்
என்று பிறந்ததிலிருந்தே
உணர்ந்துவருகிறேன்; இதை நீ
உறுதிப்படுத்தவேண்டும்;
உள்ளம் ஒன்றானவர்களை
உடல் இணைய
வைப்பவன் என்றே
உரைக்கப்படுபவன் நீ; இதை
உறுதிப்படுத்தும்
விதமாக என்னை அந்த
வேங்கடனாதனோடு இணைப்பதுன்
வேலை;

Wednesday, August 17, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.3

மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கித்
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே,
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு,
கோவிந்தா னென்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினிற் புகவென்னை விதிக்கிற்றியே



காமதேவா, உன்
திருப் பாதக்கமலங்களை
தினம் மூன்று முறை
தொழுது,
வெள்ளை மலர் கொண்டு
வணங்கி,
உனை
வழிபடுவேன்;
என் இறைவனோடு
எனை இணைத்திடுவாய்;
மன்மதன் தன்
மந்திரக் கணையால் காதலர் எல்லாரையும்
இணைத்திடுவான் என்றே புகழ் பெற்றவன் நீ;
இப் புகழை
இழக்காது நீ தக்க வைத்துக்கொள்;
மலரும் மலர்களைக் கொண்டு
ஓர் அம்பு செய்து
கோவிந்தனின் பெயர் சொல்லிப் பிரார்த்தித்து
என்னை அந்த ஒளி வெள்ளத்தோடு
இணையுமாறு
எய்திடு;

Tuesday, August 16, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.2

வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே



காமதேவா, வெள்ளையான சுத்தமான
நுண்ணிய மணல் எடுத்து
நீ வரும் பாதை எங்கும் பரப்பி, அலங்கரித்து
சூரியோதயம் முன் குளித்து
பழுதற்ற
மரக் குச்சிகளை சேகரித்து
மந்திரம் சொல்லி
அக்னியிலிட்டு என்
ஆசை உரைத்து
அருள வேண்டுவேன்;
நீ உன் பூவாலான அம்போடும்,
கரும்பு வில்லோடும் தயாராகி
கடல் வண்ணனின் பெயரெழுதி
என் ஆசைகளை
எடுத்துரைத்து அவ்வம்பை
எய்துவாயாக;

Monday, August 15, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.1

தையொரு திங்களும் தரைவிளக்கித்
தன்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே


தை மாதம் எல்லா நாளும்
தரை சுற்றம் தூய்மையாக்கிக்
கோலமிட்டு,
மாசியின் முதல் பாதியில்
எமை ஆசிர்வதிக்க
எம்பெருமான் வரும் பாதை
எங்கும்
ஏராளமாய் அலங்கரித்து
நடந்து வர ஏதுவாக
நுண்ணிய மணல்
நிரப்பி,
காம தேவன் வந்ததும்
அமர வைத்து
அவனையும்
அவன் தம்பியையும் வழிபட,
அவ்விருவரும் எனை
சக்ராயுதம் ஏந்திய
அந்தத் திருவேங்கடமுடையானுக்கு
சேவை செய்ய
அருள் கிடைக்க
ஆசிர்வதிப்பர்;

Sunday, August 14, 2011

வெங்கடேச சுப்ரபாதம் - 7

25. Elaa lavanga ghanasaara sugandhi theertham
Divyam viyathsarithi hemaghateshu poornam
Drutwadhya vaidika sikhamanaya: prahrushta:
Thishtanthi Venkatapathe! thava suprabhatham

வேதம் அறிந்த நல்லோர் பலர்
உன்னைக் காண,
கற்பூரம் ஏலக்காய்
கலந்த
மங்கள நீர்
தங்கத்
தாம்பாளத்தில் நிரப்பி
தம் தலையில்
சுமந்துக்
காத்திருக்கின்றனர்;
கண் திறந்து
எல்லாரையும் காண்பாய்,
அருள் செய்வாய்,
எம்பிரானே.

26. Bhaswanudethi vikachani saroruhani
Sampoorayanthi ninadai: kakubho vihangha:
Sree vaishnavassathatha marthitha mangalasthe
Dhamasrayanthi thava Venkata! Subrabhatham

உதித்தது சூரியன்;
மலர்ந்தது தாமரை
மலர்கள்;
பறவைகள்
கிளம்பியது தம்
கூட்டிலிருந்து;
வைஷ்ணவர்கள் எல்லாரும்
உன் வாசல் வந்து
வழிபட,
உன் புகழ் பாடி
வணங்கக் காத்திருக்கின்றனர்;
வேங்கடநாதா,
விழி திறந்து எங்கட்கு அருள் செய்;


27. Bhramadayassuravarasamaharshayastthe
Santhassa nandana mukhastvatha yogivarya:
Dhamanthike thavahi mangala vasthu hasthaa:
Sree Venkatachalapathe! thava suprabhatham

பிரம்மனும்,
தேவர்களும்,
சனந்தனா போன்ற
சாதுக்களும்
நல்ல பல
நற்செய்திகளோடு
நின்னைக் காணக்
காத்திருக்க
விழித்தெழுந்து
எம்
எல்லோரையும் ரட்சித்தருள்வாய்
ஏழுமலையானே.

28. Lakshminivasa niravadya gunaika sindo:
Samsarasagara samuththaranaika setho
Vedanta vedya nijavaibhava bhakta bhogya
Sree Venkatachalapathe! thava suprabhatham

தேவி லக்ஷ்மியின்
உறைவிடமே,
வாழ்க்கை எனும் கடலைக்கடக்க
உதவுவோனே,
வேதங்களின் தலைவனே,
உயர்ந்தவர்களுக்கெல்லாம்
உயர்ந்தவனே,
அடிபணிந்தோர்க்கெல்லாம்
அருள்பவனே,
வேங்கடேசனே,
விழித்தெழுவாய்.

29. ltnam vnsnacnala pamerlna suprabhatham
Ye manava: prathidinam patithum pravrutha:
Thesham prabhatha samaye smruthirangabhhajam
Pragnyam paraartha sulabham paramam prasoothe

வேங்கடநாதனின்
இந்த
சுப்ரபாதத்தை
தினம்
பக்தியோடு
படிப்போர் பாடுவோர்
கேட்போர்க்கு
பகவானின் அனுகூலம்
கிட்டும்; அவர் தம்
குறை எல்லாம் நீங்கும்;
வாழ்க்கை
வளமடையும்;

Saturday, August 13, 2011

வெங்கடேச சுப்ரபாதம் - 6

21. Sree bhoominayaka dayadhi gunammruthabdhe
Devadideva jagadeka saranya moorthe
Sreemannanantha garudadibhirarchithangre
Sree Venkatachalapathe! thava suprabhatham

பூமாதேவி
பூஜிக்கும்
பெருமானே,
அருள்
அள்ளித்தரும்
அன்பனே,
அகில உலகுக்கும்
அடைக்கலம்
அளிப்பவனே,
கடவுள்களுக்கெல்லாம்
கடவுளாணவனே,
கருடனும்
ஆனந்தனும்
அடிப்பணிய
அருள்செய்பவனே,
வேங்கட ரமணா,
விழித்தெழாய்.

22. Sree Padmanabha Purushothama Vasudeva
Vaikunta Madhava Janardhana chakrapane
Sree vathsachinha saranagatha parijatha
Sree Venkatachalapathe! thava suprabhatham

பத்மநாபா
புருஷோத்தமா
வாசுதேவா
வைகுண்டா
மாதவா
ஜனார்த்தனா
சக்ரபாணி
ஸ்ரீவத்சா
அடைக்கலம் அடைந்த
அடியவரை எல்லாம்
காத்தருள்வோனே,
வேங்கட மலையானே,
விழித்தெழுவாய்.

23. Kandarpa darpa hara sundara divya murthe
Kanthaa kuchamburuha kutmialola drishte
Kalyana nirmala gunakara divyakeerthe
Sree Venkatachalapathe! thava suprabhatham

அழகனே, மகாலக்ஷ்மியின்
அருகில்
அகமகிழ்ந்து உறங்குபவனே,
நல்ல நிகழ்வுகளையே
நாளும்
நடத்துபவனே,
சுத்தமான
சுந்தரனே, அழியாப்
புகழ்
பெற்றவனே,
வேங்கட மலையில்
வீற்றிருப்பவனே,
விழி திறந்து எங்கட்கு
அருள் புரிவாய்.

24. Meenakruthe kamatakola Nrusimha varnin
Swamin parashvatha thapodana Ramachandra
Seshamsharama yadhunandana kalki roopa
Sree Venkatachalapathe! thava suprabhatham

மீனாய்
கூர்மமாய்
வராகமாய்
நரசிம்மனாய்
வாமனனாய்
பரசுராமனாய்
ஸ்ரீ ராமனாய்
பலராமனாய்
யாதவக்
குலத்தின்
குழந்தையாய்
கல்கியாய்
அவதரித்து
எங்களைக்
காத்த
பெருமாளே,
விழி திறந்து
விழித்தெழாய்.

Friday, August 12, 2011

வெங்கடேச சுப்ரபாதம் - 5

17. Dhateeshuthevihagaraja mrugadhiraja
Nagadhiraja gajaraja hayadhiraja:
Swaswadhikara mahimadhika marthayanthe
Sree Venkatachalapathe! thava suprabhatham

பறவைகளின்
அரசன் கருடனும், விலங்குகளின்
அரசன் சிங்கமும், பாம்புகளின்
அரசன் ஆதி சேசனும், யானைகளின்
அரசன் ஐராவதமும், குதிரைகளின்
அரசன் உச்சைஸ்ரவசும்,உன்
ஆணைக்காக காத்திருக்கின்றனர், உனக்கு
அடிபணிந்து பணிவிடை செய்ய, உன்னை
அழைத்துச் செல்கையிலெல்லாம்;
அய்ய,
அனைவரையும் காத்து ரட்சித்து
அருள் புரியத் துயிலேழாய் !!!


18. Sooryendhubhouma bhudhavakpathi kavya souri
Swarbhanukethu divishathparishathpradanaa:
Twaddhasa dasa charamavadhidaasa daasa:
Sree Venkatachalapathe! thava suprabhatham


கிரகங்கள்
சூரியன், சந்திரன்,
சுக்கிரன்,
குரு, ராகு, கேது,
புதன்,
வெள்ளி, சனி,
எல்லாரும் உன்
ஏவல் செய்ய
எழுந்தருளியுள்ளனர்.
வேங்கட மலை வாழ்
வெங்கடேசா,
விழித்தெழுவாய் !!!

19. Thwathpadadhulibharita spurithothha manga:
Swargapavarga nirapeksha nijantharanga:
Kalpagamakalanaya kulatham labhanthe
Sree Venkatachalapathe! thava suprabhatham

உன் அடியவர்களனைவரும்
உன் திருவடி தம் தலை மேல் கொண்டு
உன் புகழ் பாடி
உன்னோடு என்றும் இருக்க
விரும்பியோர்,
கலியுகத்தின்
கடைசியில் நீ
அவர்களை விட்டு
அகன்று விடுவாய் என்
அஞ்சுகின்றனர்;
அவர்களனைவரின்
அச்சம் போக்க
அரங்க நாதா
உடன் நீ
உறக்கம் கலைந்து
விழித்திடுவாய் !!!

20. Thvadgopuragra sikharani nireekshmana
Swargapavarga padaveem paramam shrayantha:
Marthyaa manushyabhuvane mathimashrayanthe
Sree Venkatachalapathe! thava Suprabhatham

பிறப்பு அறுத்துச் சுவர்க்கம்
புகக் காத்திருக்கும்
பல அடியோரும்
நின் கோவிலின்
நீண்ட கோபுரம் தரிசித்து,
நின் திருமுகம் தரிசித்து, என்றும்
நின் தொண்டாற்றி இந்த புவியிலேயே கிடக்க
நினைக்கின்றனரே;
வேங்கட மலை வாழ்
வெங்கடேச, இவர்கள்
அனைவரையும்
ஆசிர்வதித்து
அருள் செய்ய
விழித்தெழுவாய் !!!

Thursday, August 11, 2011

வெங்கடேச சுப்ரபாதம் - 4

13. Sreemannabheeshta varadhakhila lookabandho
Sree Sreenivasa Jagadekadayaika sindho
Sree devathagruha bhujanthara divyamurthe
Sree Venkatachalapathe! thava suprabhatham

எல்லாரும் வாழ்வில் உய்ய
எங்களுக்கென
எழுந்தருளியிருப்பவனே,
தன் நெஞ்சில்
தன் துணையாளைக் கொண்டு
தரணி துயர்
துடைப்பவனே,
திரு
மலையையே தன்
மனையாகக் கொண்டவனே,
வேங்கடநாதா
விழித்தெழுவாய் !!!

14. Sree swamy pushkarinikaplava nirmalangaa
Sreyorthino hara viranchi sanadadhyaha
Dware vasanthi varavethra hathothamangaha:
Sree Venkatachalapathe! thava suprabhatham


பிரம்மனும் சனந்தனும்
புஷ்கரணி எனும்
புண்ணிய தீர்த்தத்தில்
உடல் நனைத்து
உலக நலனுக்காக
உன்னை பூஜிக்க
வாசல் வந்துக் காத்திருக்கின்றனர்;
இவர்களையும் மற்ற எல்லாரையும்
இன்புற்றிருக்க அருள் செய்வாய்,
விழித்தெழுவாய்,
வேங்கட மலை வாழ்
வெங்கடேசா !!!

15. Sree seshasaila garudachala venkatadri
Narayanadri vrishabhadri vrishadri mukhyam
Akhyam thvadeeyavasathe ranisam vadanthi
Sree Venkatachalapathe! thava suprabhatham

ஸ்ரீ சேசசைலம்
கருடாச்சலம்,
நாராயண மலை,
விருஷ மலை
எனப்
பல்வேறு நாமங்களில்
அழைக்கப்படும்
வேங்கட மலை வாழ்
வெங்கடேசா,
உனை தரிசிக்க
தேவர்கள் எல்லோரும்
திரண்டிருக்கின்றனர்;
திருமலை வாழ்
திருமாலே,
கண் திறந்து எல்லோரையும்
காண்பாய்.

16. Sevaaparaashiva suresa krusanudharma
Rakshombhunatha pavamana dhanadhi nathaha:
Bhaddanjali pravilasannija seersha deSaha:
Sree Venkatachalapathe! thava suprabhatham

இந்திரன்,
அக்னி,
வருணன்,
நைருதி,
வாயு,
குபேரன் மற்றெல்லா
கடவுளும்
தன் தலை மேல் கைகுவித்து உன்
தரிசனத்திற்காகவும், உன்
ஆணைக்காகவும்
காத்திருக்கின்றனர்;
கண் திறந்து, எல்லாரும்
கண்டு இன்புற
அருள் செய்வாய்.

Wednesday, August 10, 2011

வெங்கடேச சுப்ரபாதம் - 3

9. Thanthree prakarsha madhuraswanaya
vipanchyaa Gayathyanantha charitham
thava naradopi Bhashasamagrama sakruthkara sara ramyam
Seshadri sekhara vibho! thava suprabhatham

தன்
தம்புரா மீட்டி நாரதர்,
அழகாய் இசை
அமைத்து,
அற்புதமாயுன் புகழ் பாட,
அதைக் கேட்க
விரைந்து நீ
விழித்தெழுவாய்
வரம் பல
வழங்கி எங்களையாளும்
வேங்கடநாதா !!!

10. Brungavaleecha makaranda rashanuvidda
Jhankara geetha ninadaissa sevanaya
Niryathyupaantha sarasee kamalodarebhyaha
Seshadri sekhara vibhol thava suprabhatham

பூஞ்சோலையில்
பூத்த
பூக்களுள்
புகுந்து தேனருந்திவிட்டு
அச்சுவையில்
வண்டுகளெல்லாம்
சுருதி சேர்த்து உன் புகழ் பாட,
பரந்தாமா, இதைக் காண கேட்க
கண் விழிப்பாய் !!!

11. Yoshaganena varadhadni vimathyamaane
Ghoshalayeshu dhadhimanthana
theevraghoshaaha Roshaathkalim
vidha-dhathe kakubhascha kumbhaha
Seshadri sekhara vibho! thava suprabhatham

மங்கையர்
கை வளையல்
ஒலிஎழுப்பத்
தயிர் கடையும் ஓசை
உன் பெயர் சொல்லி
எட்டுத் திக்கும் ஒலிக்கிறதே,
விழி திறந்து
வளை மங்கையர் இவர்களை
வாழ்த்தி அருள்புரிய
வாராய்
வேங்கட மலையானே !!!

12. Padmeshamithra sathapathra kathalivargha
Harthum shriyam kuvalayasya nijanga Lakshmya
Bheree ninadamiva bibrathi theevranadam
Seshadri sekhara vibho! thava suprabhatham


கமல மலரைச்
சூழ்ந்திருக்கும்
கருத்த வண்டுகளும்,
கரு நீல
குவளை மலர்களும்
நிறைந்த சோலை பல
சூழ்ந்த
திருவேங்கடமலையானே, உன்
திருவிழி
திறந்து, எங்கள்
துயரெல்லாம்
தீர்த்திடத்
துயிலெழாய் !!!

Tuesday, August 9, 2011

வெங்கடேச சுப்ரபாதம் - 2

5. Athriyadhi saptharushay ssamupasya sandyam
Aakasa sindhu kamalani manoharani
Aadaya padhayuga marchayithum prapanna:
Seshadrisekhara vibho! Thava suprabhatham

அதிரி போன்ற
அதிசிறந்த முனிவர்கள்
அவர்தம் காலைச் சந்தியாவந்தனம்
கசடறச் செய்து முடித்து,
கங்கையிலிருந்து
கொணர்ந்த தாமரை உன் பாதக்
கமலங்களில் வைத்து சேவிக்கக்
காத்திருக்கின்றனர்;
கண் திறந்து எங்களைக்
காத்தருள்வாய் எம்பெருமானே !!!


6. Panchananabja bhava shanmukavasavadhya:
Tryvikramadhi charitham vibhudhasthuvanthi
Bhashapathipatathi vasara shuddhi marath
Seshadri sekhara vibho! thava subrabhatham

ஐந்து முகம் கொண்ட பிரம்மனும்,
ஆறு முகம் கொண்ட முருகனும்,
மூன்று அடி கொண்டு
மூயுலகும் அளந்த உன் புகழ் பாட,
கிரகங்களின் தற்போதைய நிலை
கணித்து,
பஞ்சாங்கம்
படித்து உன் முன் சமர்ப்பிக்க
பிரகஸ்பதி காத்திருக்க,
எழுமலை வாழ்
எம்பெருமாளே,
எங்களைக்
காத்தருளக்
கண் திறவாய் !!!

7. Eeshathprapulla saraseeruha narikela
Phoogadrumadi sumanohara Balikanam
Aavaathi mandamanilassaha divya gandhai:
Seshadri shekara vibho! thava suprabhatham

சுத்தமானக்
காற்று
சுகந்தம்
கொணர,
பூக்கள்
பூத்து மது நிறைந்து வடிய,
மரங்களெல்லாம்
அசைந்து
ஆடத் தொடங்க,
சேச மலை வாழ்
சேது மாதவா, நினைச்
சேவிக்கக்
காத்திருக்கும் எங்களைக்
காக்க
கண் திறந்து விழித்தெழுவாய் !!!

8. Unmeelya nethrayugamuththama panjarasthaa:
Paathraa vasishta kadhaleephala payasani Bhukthvaa
saleelamatha keli sukha: patanthi
Seshadri sekhara vibho! thava suprabhatham

கொஞ்சு மொழியில்
கிளிகளுன் புகழ் பாடிக்
கிடக்கின்றன.
உன் அடியவர்களெல்லாம்
உனைக் காண
உன் கருணை மழையில் நனைய
உன் முன் காத்திருக்கின்றனர்.
விழித்தெழாயோ
வினை தீர்க்க
வல்ல எம்பிரானே !!!

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 7 part 2

வளமான கண்ணன்

சகி,
கண்ணன் எனைக்
காண வருவானென்று
காத்திருந்தேன்; ஏனோ எனைக்
காயப்படுத்தியும்
கலங்கடித்தும் ...
தவறு செய்யாத நான்
தனித்திருக்க ...
எப்படியோ
என் கோபம்
இனி குறையாது; அந்தக் கண்ணனை
இனி நான் நாடப்போவது
இல்லை;

இரக்கமற்ற அந்தக் கண்ணன்
வராததற்கு நீ
வருந்துவதெதற்கு தோழி ?
வாசம் மிக்க
வலைகரத்தார் பலர் அவன்
வலையில்
விழுந்துள்ளனர்;
கண்ணனுக்காக
காத்திருந்து காத்திருந்து என்
கோபம் அதிகரித்து என்இதயமே
நொறுங்கி விடுமென்று நான்
நினைக்கிறேன்;
அவன் எண்ண அலைகளால் என்
இதயம் ஈர்க்கப்பட்டாலும்,
இறந்து என் ஆத்மாவாவது அவனோடு
இணைய விரும்புகிறேன்;

ஓ ! சந்தனக் காற்றே
காமன் நண்பன் நீ தான்
தந்திரம் மிக்கவனென
தருக்கு கொள்ளாதே;
கண்ணன் உன்னை மிஞ்சிய
மாயக்காரன்;
முடிந்தால் அவனை என்
முன்னே நிறுத்து;
தனியே நான்
தவிப்பதை
தடுத்து நிறுத்து; உனை நான்
ஒப்பற்ற ஒருவன் என
ஒத்துக்கொள்கிறேன்;
அப்படியில்லையெனில்
எனக்கு உயிர் தருபவனில்லை நீ,
என் உயிர் எடுப்பவனே நீ;

காதலை என்னுள் புகுத்தியவன்,
கன்னியர் பலரோடு அங்கே
களிப்புற்றுக்கிடக்கிறான்; மெல்லிய இந்தக்
காற்று
என்னுள் நெருப்பைத் தோற்றிவித்து
என்னையே
எரிக்கிறது;
வட்ட அந்த நிலவு என்மேல்
விடத்தை
உமிழ்கிறது;
கருணை
கொஞ்சம் கூட இல்லாத அந்தக்
கண்ணன் மேலே என்
சிந்தனைகள்
சுற்றி வருகிறது;
இந்தக் காம தேவன்
கன்னியர் பலரை
இப்படித்தான்
இம்சிப்பானோ ?

Monday, August 8, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 7 part 1

வளமான கண்ணன்

தவறு செய்பவன் கண்ணனே,
பிருந்தாவனப்
பெண்கள் எல்லோரையும் வழிமறித்து
பணி செய்யவிடாது
படுத்தியவன் கண்ணன்
என்றே
எண்ணினாள் ராதை;

வட்ட நிலா மெல்ல
எட்டிப் பார்க்கையில்,
குழலோடு கண்ணன்
குறித்த நேரத்தில் வராததினால்,
கடுஞ்சினம் கொண்டாள்
ராதை;

கண்ணன் வராத
காரணமென்ன ?
மனதை
மயக்கும் வாச
மலர்கள்
மலர்ந்த இந்த
மலர்வனத்துக்குள் வராது, வேறு
மங்கை பின்
மயங்கிச் சென்றுவிட்டானோ ?
சொந்தமெனச்
சொல்லி யாரேனும்
சூழ்ந்துகொண்டிருப்பார்களோ ?
வேறுயாரோ சிலரோடு
பாடி,ஆடிப்
பொழுது கழிக்கப்
போய்விட்டானோ ?
ஒருவேளை
எனைத் தேடித் தேடி
எங்கே ராதை
என்று தெரியாது
ஏங்கி அலைகிறானோ ? அல்லது
எனைக் காண விரும்பாது வேறு
எங்கேயோ இருக்கிறானோ ?


கண்ணனிடம்
தூது சென்ற தன்
தோழி சோகத்துடன்
திரும்புவதைக்
கண்டாள் ராதை;
வேறு யாரோ
மங்கை கண்ணனை
மகிழ்விப்பதாய்த் தானே
கற்பனை செய்து
கலங்கினாள்;

வெங்கடேச சுப்ரபாதம் - 1

1. Kowsalya supraja Rama poorva sandhya pravarthathe
Uthishta narasardoola karthavyam daivamahnikam


கௌசல்யாவின்
குமாரா, ராமா,
காலை புலர்ந்தது,
கண் திறவாய்,
ஆற்ற வேண்டிய காரியங்கள்
அனேகம் உள்ளது,
அருள் புரிய
விழி திறவாய்;


2. Uthishtothishta Govinda uthishta garudadhwaja
Uthishta kamalakantha thrilokyam mangalam kuru

கோவிந்தா,
கண் திறவாய்;
கருடனைக்
கொடி மேல் கொண்டு
காத்திடுவோனே,
தாமரை மேலமர்ந்த
தேவியின்
தலைவனே,
மூவுலகும்
மகிழ்ச்சியோடு இயங்கக்
காப்பவனே,
கண் திறவாய்;


3. Mathassamasta jagatham madukaitabhare:
Vakshoviharini manohara divyamoorthe
Sree swamini srithajana priya danaseele
Sree Venkatesadayithe thava suprabhatham

அகில உலகத்தையும்
அன்னை போல் காத்து,
அசுரர்களை அழித்து
ஆனந்தம் அளித்தவனே,
அழகான எம்பிரானே,
அடைக்கலம்
அடைந்தோர்
அனைவரையும் காக்கும்
அந்த லக்ஷ்மியின்
அன்பனே,எழுந்து நீ
அருள் செய்யாய்;


4. Thavasuprabhathamaravindalochane
Bhavathu prasanna mukhachandra mandale
Vidhisankarendra vanithabhirarchithe
Vrishasaila nathadavithe, davanidhe

தேவி,
தாமரைக் கண்கள்
உடையவளே,
மூன்று உலகுக்கும்
மகிழ்ச்சி அளிக்கும்
முழுமதி போன்ற
முகம் கொண்டவளே,
மற்றெல்லா தேவியரும்
மனமுருகத் தொழ, எல்லாரையும்
காக்கும்
கருணைக் கடலே,
வேங்கட மலை வாழ்
வெங்கடேசனுக்கு மிகவும்
வேண்டப்பட்டவளே,
விழி திறந்து
விழித்தெழாய்;

Sunday, August 7, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 6

பிறர் துன்பம் பாராக் கண்ணன்

கண்ணனைக்
காண விரும்பாது
தானிருந்த இடத்திலேயே
தனித்திருந்தால் ராதை;
தோழி இதனையுணர்ந்து
தூது சென்றால் மீண்டும்
துவாரகை மன்னனிடம்;

தந்திரக் கண்ணா,
மான் விழி மங்கை ராதை,
சோகம் சூழ்ந்த நிலையில்
சோர்ந்திருக்கிறாள்;
உன்னோடிருந்த எல்லநேரங்களையும்
உள்ளத்தில் இருத்தி மகிழ்கிறாள்;
கற்பனையிலேயே வாழ்ந்து,
எவரோடும் பழக
எண்ணாது,
உன்னாலே தனிமையாக்கப்பட்டாள்
உன் எண்ணங்களையே
உறுதியாகப் பற்றிக்கொண்டு, ஆனால்
உயிரோடுதான் இருக்கிறாள்;

எல்லா வித ஆபரணங்களும் அணிந்து
எடுப்பாய்த் தோன்றும் ராதை,
மலர்ந்த மலர்களிலெல்லாம் உன்னை
மட்டுமே கண்டு
மகிழ்ந்து, உன்னை மட்டும்
மனதார நினைத்து
உள்ளன்போடு
உருகி, நீ இல்லாது
உறக்காது
உனக்காகவே காத்துக்கிடக்கிறாள்,
உன் ராதை;

Friday, August 5, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 5

பாசமே உருவான கண்ணன்

காத்திருப்பேன் நானென்
காதலி ராதைக்காக இங்கேயே;
அவளை இங்கே வரச்சொல்; நான்
அழைத்ததாக நீ போய்
அவளிடம் சொல்லிடு;
உரைத்ததை
உரைத்தவாறே
உரைத்தாள்
உயிர்த் தோழி, ராதையிடம்;

முன்னம்,
எங்கே நீ கண்ணனோடு,
இனிமையாகப் பொழுது கழித்தாயோ,
காம தேவனின்
கணைகளை எதிர்கொண்டு
களிப்புற்றுக் கிடந்தாயோ,
அங்கேயே,
அந்த யமுனையின் கரையில்,
உன்னை எண்ணியே
உன் பெயரைச் சொல்லியே
உனக்காகவே
தவம் செய்து காத்திருக்கிறானுன்
தலைவன்;


ராதா,
உனைப் பார்க்க முடியாது, தன்
ஆசைகளை
அடக்கிக் கொள்கிறான்
அந்தக் கண்ணன்;
எங்கிருந்தாவது நீ
எதிர்படமாட்டாயே திடீரென்று
என
எல்லா திக்கிலுமுனைத்
தேடிக்கொண்டே இருக்கிறான்
அந்தக் கண்ணன்;
வண்டுகள் மொய்க்குமந்த
வாசம் மிக்கச் சோலையிலே
நீ இருப்பதாய் எண்ணி
நுழைந்து உனைக் காணாது
திகைக்கிறான்
அந்தக் கண்ணன்;
அழகி உனக்காக
அழகானப் பூ மஞ்சனையை
அலங்கரித்துக் காத்திருக்கிறான்
அந்தக் கண்ணன்;

ஏ ! ராதே,
இளம்பெண்ணே,
வலுவிழந்த
உன் குற்றச்சாட்டைப் போல்
வலுவிழந்து மறையத் தொடங்கி
விட்டானந்த ஆதவன்;
கருத்த கண்ணனின்
நிறமொத்த இருள் எங்கும்
பரவத் தொடங்கிவிட்டது;
காதல் பறவைகளின்
கானம் போலென் உரை;
இன்னும் கால தாமதம்
எதற்கு ?
இப்பொழுதே
கிளம்பு;
கண்ணனைக் கண்டபின்பே
திரும்பு;

கருத்த
மரங்களின்
மத்தியிலமர்ந்து
தியானத்தில்,
"என்னருகே வருகிறாள்,
என்னைக் காண்கிறாள்,
என்னிடமெல்லக் கதையும் சொல்கிறாள்,
காதல் விளையாட்டுக்கள் விளையாடுகிறாள்,
என்னை அணைத்து ஆனந்திக்கிறாள்"
என்றே அர்ச்சித்து வந்தாலும்,
கண் விழித்து
காதலி நீ அருகிலில்லாததை
கண்டுணர்ந்து
உன் வருகைக்காகக்
காத்திருக்கிறான்;
வாராததேன் எனக்
குழம்பிக் கிடக்கிறான்;

ஒளியேதும்
உட்புக வழி
இல்லா இந்த
இருளில்,
யாருமறியாது
மெதுவாய்
உன் தடம் பார்த்துச்
செல்வாயானால்
கண்ணன் உன்னைக்
கண்டுகொள்வான்;
களித்திருக்க கூட்டிச்
செல்வான்;
கிளம்பிடு இப்போதே;

Thursday, August 4, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 4

எல்லா இடத்திலும் ராதையை தேடி
எங்கும் கிடைக்காது
என்ன செய்வதென
ஏதும் புரியாது
வருத்தம் மிக
வாடிக்கிடந்த கண்ணனிடம்
வந்தாள் ராதையின் தோழி.

கண்ணா,
ராதையின் வீட்டில் யாருமில்லாததால்,
அவளின் நெருங்கிய தோழியர் சிலர்
அவளை எந்நேரமும் சூழ்ந்திருக்கின்றனர்;
விருப்பமில்லாவிடினும்
வேறேதும்செய்யமுடியாது இருக்கிறாள்;
எல்லோரும் சேர்ந்து
காட்டுக்கு செல்ல,
அங்கே அவள் தனியே
அமர்ந்திருக்க,
தன் மூச்சிக்காற்றிலே வெந்து,
அந்த வெப்பம் தீயாய் மாற,
சில மரங்கள் தீ பற்ற,
காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிய,
ஒரு பக்கம் நெருப்பு,
மறு பக்கம் காமதேவனின் கணைகள்
புலியாய் அவளை
பின்துரத்த
நெருப்பினிடையே சிக்கிய மானாய்,
எப்பக்கமும் போக முடியாது
துடித்துக் கிடக்கிறாள்;


கண்ணா,
காதலெனும்
கடலில் மூழ்கிக்கிடக்கிறாள்;
திடீரென பேசுகிறாள்;
பலசமயம் பேசாதிருக்கிறாள்;
புலம்புகிறாள் சிலசமயம், ஏதும்
புரியாதுப் பார்க்கிறாள்
பலசமயம்,
உறக்கத்தில் எழுந்து நிற்கிறாள்;
ஏன் எழுந்தோமென அறியாது
மீண்டும் உறக்கம் தொடர்கிறாள்;
கண்ணை உருட்டுகிறாள்,
பாதி திறந்து
பாதி மூடி,
திடீரென மயங்கி
இன்னும் என்னென்னவோ செய்கிறாள்;
இந்த மாதிரி நோய்க்கெல்லாம்
நீ தானே சிறந்த மருத்துவன்;
கொஞ்சும் உன் காதல் பார்வையையே
கொஞ்சம் மருந்தாய்க்
கொடுத்தாயெனில்
உன்னாலவள் பிழைப்பாள்;
இல்லையேல் அவள்
இனி இல்லை;

நிலவால் குளிர்விக்கமுடியாது,
சந்தனத்தால் குளிர்விக்கமுடியாது,
தாமரை மலர்கள் குளுமை
தரமுடியாது,
தனியே ஓரிடத்தில்
தவமிருக்கிறாள்,
உன்னை நம்பி,
உன்னை மட்டுமே
முழுவதுமாய் நம்பி;
காத்திடு
கண்ணா;

முன்னம்
உன்னோடிருக்கையில் ஒரு
வினாடி கூட
விழி மூட மனமில்லாது
உன் உருவம்
விழி விட்டு மறைய இடம்தராது
வாழ்ந்தவள், இந்த
வசந்த காலத்தில்
விருட்சங்களெல்லாம் மலர்ந்து
வாசம் தருமிந்த
வேளையில் எப்படியெல்லாம்
வருந்திக் கிடக்கிறாளோ ?

Wednesday, August 3, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 3 part 2

அழகான கண்ணன்

காதல் தேவா, உன்
கையாள் தானோ ராதை ?
வளைந்த அவள் புருவங்களே
வில்லோ ?
அழகாய் உடுருவிப் பார்க்கும்
அவள் பார்வையே
அம்போ ?
காதுகளின் ஓரத்தில் மலர்களாலான
மாலை அணிந்திருப்பாலே
வில்லின் நாணோ அவை ?
சத்தமில்லாது
சம்சரித்துக்கொள்ளும்
சாதுர்யம் நிறைந்தவர்கள் இருவரும்;

அழகான என்
ராதையே,
உன் ஒரு பார்வை
உடலெங்கும்
உடுருவிச்செல்லும்;
அங்கம் எல்லாவற்றையும்
ஆட்டிவிக்கும்;
வளைந்து நெளிந்து
வளர்ந்திருக்குமுன் கூந்தல்,
வெள்ளரி போன்றுன் இதழ்கள்,
அழகாய் அளந்து அமைக்கப்பட்ட
உன் மார்பகங்கள்;
ஐயகோ, எனைத் துன்புறுத்துகின்றன;

இதமாயுன் தீண்டல்கள்
இன்னும் என் நெஞ்சில்;
கனிந்த உன்
காதல் பார்வை
என்றும் தொடரும் என்னை;
தாமரை மணம்
ததும்புமுன் முகம்;
வெள்ளரி போன்றும் இதழிலிருந்து
வெளிப்படும் இனிமையான
வார்த்தைகள் இன்றும் மறையாது
என் நினைவில்;
ராதே உன்னால் இன்புறாத
எந்த பாகமும்
என்னிடமில்லை;
உனக்காகவே ஏங்கிக்
காத்திருக்கிறேன்;
இல்லாத ஒன்றையே
என்றும் எண்ணி
ஏங்கிக் கிடக்கும்
இதயம்
இருக்கும் உன்னை எண்ணி
இன்று ஏங்கிக் கிடக்கிறதே;

கண்ணன் தன்
குழலெடுத்து மெல்ல
வாசிக்கத் தொடங்கினான்;
மனதில் ராதையைக் கொண்டு,
அவள் அழகிய முகத்தை
மனக்கண்ணில் கண்டு
குழலிசையில் மயங்கி வந்த
கோபியர் பால் மனம் சிதையாது
ராதையை எண்ணியே
வாசித்துக் கிடந்தான் கண்ணன்;

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 3 part 1

அழகான கண்ணன்

ராதையின்
காதலில் அன்பில்
கட்டுண்ட
கண்ணன்
மற்ற கோபியரை
மறந்திட்டு
வாழ
விழைந்தான்.


காமனின்
கணைகளிலிருந்து தனைக்
காக்க ஒண்ணாது,
தேவையின்றி ராதையைத்
துறந்ததை மறந்ததை எண்ணி
வருந்தினான் கண்ணன்.
ராதையை
முன்னும் பின்னும்
இங்கும் அங்கும்
தேடி அலைந்தான்.
எங்கும் தேடியும்
எதுவும் புலப்படாது
யமுனையின் கரையில்
மயங்கி விழுந்தான்.

சிவன் அன்று
உருவமில்லாது
உனைச் சிதைத்தான், அதற்குப்
பலி வாங்க இன்றென்
பின்னே அலைகிறாயோ காம தேவா ?
என் காதலி
என்னருகில்லை.
என் கழுத்திலிருக்கும் இந்த மாலை
பரமன் கழுத்திலிருக்கும்
பாம்பு என்று நினைத்தாயோ ?
நீலத் தாமரையாலான இந்த மணி
பரமன் கழுத்திலிருக்கும்
விடம் என்று நினைத்தாயோ ?
காய்ந்த சந்தனம் என் உடலிலிருப்பது;
சிவனின் உடலில் இருக்கும்
சாம்பலன்று;
ஏனென்னைச் சோதிக்கிறாய் ?

என்று ராதை
எனை விட்டு விலகினாலோ
என் உயிர் அன்றே
எனை விட்டு விலகியது;
ஏற்கனவே இறந்த
என்னை ஏன் நீ அம்பு
எய்திக் கொல்ல
எண்ணுகிறாய் ?

Monday, August 1, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 2

நல்லவன் கண்ணன்

தன்னையும் சேர்த்து எல்லோரிடமும்
தராதரமின்றிப் பழகும் கண்ணன்,
காந்தம் போல் எல்லோரையும்
கவர்வதைக்
காண முடியாது
எதையோ தான் இழப்பதாய்
எண்ணினாள்;
தேனிக்கள் நிறைந்த
மலர் பல
மலர்ந்த சோலைக்குள்,
தன் தோழி யோடு
தனிமையில் பேச
வந்தாள் ராதை;
வந்தவுடனே
கண்ணன் மேல் தான்
கொண்டிருக்கும்
கோபத்தையும்
தனிமையில்
தவிப்பதையும்
தெரிவித்தாள்;

தோழி,
என்
எண்ணப்படி இசைவதில்லை
என் நெஞ்சம்,
கண்ணனைச் சுற்றியே என்
கற்பனைகள்;
கோபியர் பலரோடுக்
கொஞ்சி விளையாடிக்
கிடக்கையில்,
எனை மறந்து விட்டதாய்
ஏனோ ஓரெண்ணம்
என்னுள்;
தவறுகளெல்லாம்
தள்ளி வைத்து,
அவன் செய்த
நற்செயல்கள்
கணக்கெடுத்தால்
கண்ணனைப் போல்
நல்லவர் யாருமில்லை;
அவனைப் பற்றி
எண்ணுகையில்
என் நெஞ்சில் மகிழ்ச்சி
எழுகிறதே;
என் செய்ய ?


தோழி,
கோபியரோடவன்
குதூகலமாய் விளையாடுகையில் ,
நான் அங்கே நுழைகையில்,
மெதுவாய் எனைப்
ஓரக்கண்ணால் பார்த்து
பல பெண்களோடவன்
பழகுவதை நான்
பார்த்து விட்டதைப்
பார்த்து
பதறி,
வேர்த்து
அழகான
அவன் முகம் நாணி,
அழகான மங்கையர் பலர்
அவனோடு
ஆடிக் கிடக்கும்
அச்சூழலில்
அங்கே நானென்
மகிழ்ச்சியை வெளிப்படுத்திருக்கவேண்டுமோ ?
உண்மையைச் சொல் என்
உயிர்ச்சகி;

நீரின் மேல்
நிதானமாய்
நடந்து செல்லுமிந்த காற்று,
புதிய வேரூன்ற
விழுது பல
விரித்துப் படருமிந்த
விருட்சம்,
மலரத்துடிக்கும்
மாமரத்தின் இந்த
மலர் மொட்டுக்கள், அதன்
மேல் மொய்க்குமிந்த தேனீக்கள்
இவைகளெல்லாம் தனியாயிருக்கும்
என்னுள் எதையோ
விதைக்கிறதாய்
உணர்கிறேன்;
இவைகள்
இருக்குமிடம்
நாடாமலிருப்பதே
நலமென
நான்
நினைக்கிறேன்;

கண்ணனின்
காந்தச் சிரிப்பால்
கவர்ந்திழுக்கப்பட்ட
கன்னியர் பலர் அவனோடு
கலந்தாடிக்கிடக்கையில் அவர் தம்
கூந்தல் களைய, தோல் மேல் புரள,
கை தூக்கி அதையவர்
கட்ட எத்தனிக்க,
மார்பகங்கள் பிதுங்கக்
கண்ணன் மேல் தாங்கள்
கொண்ட இச்சையைக்
கண்களாளுணர்த்த,
கண்ணனும் தன்
தாபத்தைப் போக்கிக்கொள்ள
விழைவானோ ?

ஜெயதேவா - கீதா கோவிந்தம் - 1

குதூகலத்தில் கண்ணன்

ராதே,
கருமேகம் திரள்கிறது;
அடர்ந்து வளர்ந்த மரங்கள்
அதிகப்படுத்துகிறது
இருளை;
இரவும் வெகு தூரத்திலில்லை;
முன் நீ செல்ல
முகில்வண்ணன் பின் தொடர
முதலில் வீட்டுக்குச் செல்லுங்கள்;
நந்தா இப்படிச் சொன்னதும்
நாராயணன் கண்ணனும்
ராதையும்
வீடு நோக்கி
விரைந்தார்கள்;
இதைத் தொடர்ந்து
ஒவ்வொரு மரங்களிடமும்
நடைபாதை முழுவதிலும்
யமுனையின் கரையில்
மரத்தின் கிளையில்,
நிகழும் நிகழ்வுகள்
கண்ணன் ராதையின்
காதல் விளையாட்டுக்கள்
அரிதினும் அரியது;

கல்விக் கடவுள் சரஸ்வதியின்
கருணையாலும்,
கடவுள் லக்ஷ்மியின்
கடாட்சத்தாலும்
காவியமாக்கப்பட்டது
கவி ஜெயதேவரால்,
கீதா கோவிந்தமென்ற இந்த நூல்.