Thursday, August 18, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.4

சுவரில் புராணநின் பேரெழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,
அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே


காமதேவா,
உன் பெயர்
வீட்டுச் சுவரிலெல்லாம் எழுதி
உன் உருவம்
வரைந்து
உன் சேவை செய்யப்
பணிப்பெண்கள்
பலரோடு,
குதிரைகளும் கரும்பு
வில்லும்
உன் இரு புறமும்
வரைந்து
உனைக் குளிர்விக்கிறேன்;
இதற்காக நீ எனக்கு
உதவ வேண்டும்;
அந்த துவரகாபதிக்கே
என் எல்லாம்
என்று பிறந்ததிலிருந்தே
உணர்ந்துவருகிறேன்; இதை நீ
உறுதிப்படுத்தவேண்டும்;
உள்ளம் ஒன்றானவர்களை
உடல் இணைய
வைப்பவன் என்றே
உரைக்கப்படுபவன் நீ; இதை
உறுதிப்படுத்தும்
விதமாக என்னை அந்த
வேங்கடனாதனோடு இணைப்பதுன்
வேலை;

No comments:

Post a Comment