Sunday, August 28, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 2.3

குண்டுநீருறை கோளரீ! மத
யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
கைகளாற்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள்
சிற்றில்வந்து சிடையேலே


வளமான நுண்ணிய மணல் கொண்டு,
வளையல் கைகளால் எங்களை
வருந்தி இந்த
வீடுகளை நாங்கள்
வடிவமைத்துள்ளோம்; முதலையின்
வாயில் சிக்கிக்கொண்ட
வாரணத்தை
விரைந்து சென்று
விடுவித்தவனே,
பாற்கடலில்
பள்ளி கொள்ளும்
பெருமானே, உன் ஓரப்
பார்வையில் எங்களைப்
பார்த்து அருள் புரி,
பாவை நாங்கள் உன் திருவடி
பணிகிறோம்; எங்கள்
சிற்றில்களை
சிதைக்காதிருக்க
வேண்டுகிறோம்;

No comments:

Post a Comment