Tuesday, August 16, 2011

நாச்சியார் திருமொழி - பாசுரம் 1.2

வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே



காமதேவா, வெள்ளையான சுத்தமான
நுண்ணிய மணல் எடுத்து
நீ வரும் பாதை எங்கும் பரப்பி, அலங்கரித்து
சூரியோதயம் முன் குளித்து
பழுதற்ற
மரக் குச்சிகளை சேகரித்து
மந்திரம் சொல்லி
அக்னியிலிட்டு என்
ஆசை உரைத்து
அருள வேண்டுவேன்;
நீ உன் பூவாலான அம்போடும்,
கரும்பு வில்லோடும் தயாராகி
கடல் வண்ணனின் பெயரெழுதி
என் ஆசைகளை
எடுத்துரைத்து அவ்வம்பை
எய்துவாயாக;

No comments:

Post a Comment