Tuesday, August 9, 2011

ஜெய தேவா - கீதா கோவிந்தம் - 7 part 2

வளமான கண்ணன்

சகி,
கண்ணன் எனைக்
காண வருவானென்று
காத்திருந்தேன்; ஏனோ எனைக்
காயப்படுத்தியும்
கலங்கடித்தும் ...
தவறு செய்யாத நான்
தனித்திருக்க ...
எப்படியோ
என் கோபம்
இனி குறையாது; அந்தக் கண்ணனை
இனி நான் நாடப்போவது
இல்லை;

இரக்கமற்ற அந்தக் கண்ணன்
வராததற்கு நீ
வருந்துவதெதற்கு தோழி ?
வாசம் மிக்க
வலைகரத்தார் பலர் அவன்
வலையில்
விழுந்துள்ளனர்;
கண்ணனுக்காக
காத்திருந்து காத்திருந்து என்
கோபம் அதிகரித்து என்இதயமே
நொறுங்கி விடுமென்று நான்
நினைக்கிறேன்;
அவன் எண்ண அலைகளால் என்
இதயம் ஈர்க்கப்பட்டாலும்,
இறந்து என் ஆத்மாவாவது அவனோடு
இணைய விரும்புகிறேன்;

ஓ ! சந்தனக் காற்றே
காமன் நண்பன் நீ தான்
தந்திரம் மிக்கவனென
தருக்கு கொள்ளாதே;
கண்ணன் உன்னை மிஞ்சிய
மாயக்காரன்;
முடிந்தால் அவனை என்
முன்னே நிறுத்து;
தனியே நான்
தவிப்பதை
தடுத்து நிறுத்து; உனை நான்
ஒப்பற்ற ஒருவன் என
ஒத்துக்கொள்கிறேன்;
அப்படியில்லையெனில்
எனக்கு உயிர் தருபவனில்லை நீ,
என் உயிர் எடுப்பவனே நீ;

காதலை என்னுள் புகுத்தியவன்,
கன்னியர் பலரோடு அங்கே
களிப்புற்றுக்கிடக்கிறான்; மெல்லிய இந்தக்
காற்று
என்னுள் நெருப்பைத் தோற்றிவித்து
என்னையே
எரிக்கிறது;
வட்ட அந்த நிலவு என்மேல்
விடத்தை
உமிழ்கிறது;
கருணை
கொஞ்சம் கூட இல்லாத அந்தக்
கண்ணன் மேலே என்
சிந்தனைகள்
சுற்றி வருகிறது;
இந்தக் காம தேவன்
கன்னியர் பலரை
இப்படித்தான்
இம்சிப்பானோ ?

No comments:

Post a Comment