Sunday, June 17, 2012

அரிச்சந்திரன் - 2

                                    நாரதரும் விஸ்வாமித்ரரும்

கலகம் நிகழும் இடத்தில்
இருப்பது தானே
கழகப் பிரியர் நாரதரின் விருப்பம்;
நாரதரும் வந்தார்;
விஸ்வாமித்ரரைக் கண்டார்;
யாது செய்தி என்று வினவினார்;
விஸ்வாமித்ரர் விவரித்தார்;
வினை முடிக்க துணை புரியக் கேட்டார்;
அரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைப்பது
முடியாத காரியம் என்றும்,
அதர்மப் பாதையில்
அரிச்சந்திரன் எந்நாளும் செல்லான் என்றும்
எடுத்துரைத்தார் நாரதர்;

உண்மையை வரவழைப்பது அரிது;
பொய் சொல்ல வைப்பது எளிது;
எனக்குத் துணைபுரி,
உனக்கு நான் வேண்டும்போது உதவி புரிவேன், இதை அறி;
உரைத்தார்
அரசனாய் இருந்து முனிவனாய் மாறியவர்.
ஓர் உபாயம் தந்தார்
முனிவனாகவே வாழ்பவர்;

"ஏதாவது யாகம் செய்வதாய்ச் சொல்லி
பொருள் கேளும்,
தருவதாய் வாக்குத் தருவான்;
பின் அவன் வாக்கு தவறும்படி,
இல்லை என்று சொல்லுப்படி
பெரும் பொருள் படை எல்லாம் கேளும்;
இத்தோடு ஏதும் உபாயம் செய்து
அவனைச் சத்தியம் தவறச் செய்யும்;

இருந்தும் எனக்கு நம்பிக்கை இல்லை,
அவன் பெருந்தன்மைக்கு வானமே எல்லை;
இல்லை என்று சொல்ல அவன் நா
எழுந்ததேயில்லை;
தந்த வாக்கை
தலை விற்றாவது
நிறைவேற்றுவான் அரிச்சந்திரன்";

சொல்லி முடித்துக் கிளம்பினார் நாரதர்;
தான் சொன்ன படி செய்து முடிக்கக்
கிளம்பினார் விஸ்வாமித்திரர்;


                                                                        ( தொடரும் )

2 comments:

  1. சொல்லி முடித்துக் கிளம்பினார் நாரதர்;
    தான் சொன்ன படி செய்து முடிக்கக்
    கிளம்பினார் விஸ்வாமித்திரர்

    அருமையாய் கவிதை நடையில் அரிச்சந்திரன் ! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும்,
    வாசிப்புக்கும்,
    வாழ்த்துரைக்கும்
    நன்றிகள் பல, இராஜராஜேஸ்வரி மேடம்;

    ReplyDelete