Monday, January 16, 2012

சிவபுராணம் - 4

                                    சிவ - பார்வதி திருமணம்


சிவன் சப்தரிஷிகளை அழைத்தான்;
தன் சார்பாய்த் திருமணம் பேச
பார்வதியின் பெற்றோரிடம்
அனுப்பி வைத்தான்;
சிவ பார்வதி திருமணத்தை
பெற்றோர்கள் அங்கீகரித்தனர்;
திருமண நாள் காலை
கந்தர்வர்கள் பாட
அப்சரஸ்கள் ஆட
அனைத்து தேவர்களும்
சிவனோடு திருமண மண்டபம் நோக்கிச் செல்ல,
பிரம்ம தேவன் முன்னிலையில்
திருமணம் இனிதே நடந்தேறியது;
சிவனும் பார்வதியும்
கைலாயம் திரும்பினர்;

சிவனுக்கும் பார்வதிக்கும்
பிள்ளையாய்ப் பிறந்த
முருகன், தரகாசுரனை
அழித்து தேவர்களைக் காத்தான்;

                                    சந்திரனின் சாபம்

தக்ஷனின் பெண்களில் 27 பேரைச்
சந்திரன் மணந்து கொண்டான்;
அவர்களில் அழகான ரோகினியை
சந்திரன் மிகவும் நேசித்தான்;
இதன்மூலம் மற்ற மனைவியரின்
கோபத்தைப் பெற்றான்.
இதுபற்றி தக்ஷன் பலமுறை எடுத்துக்கூறியும்
சந்திரன் செவி சாய்க்காதிருந்தான்.
'மற்ற மனைவியரை நீ
மறந்ததால்
மெதுவாய் நீ வானிலிருந்து
மறைந்து போவாய்'
தக்ஷன் சாபம் தர,
சந்திரன்
சாபம் தீர பிரம்மனிடம் ஆலோசனை கேட்க,
சிவனை நோக்கி பிரம்மன் விரல் காமிக்க,
சந்திரன் பிரபாச தீர்த்தம் சென்று,
சிவலிங்கம் ஒன்றை நதிக்கரையில் செய்து,
சிவனை எண்ணி வழிபடலானான்.
சிவன் வந்தான்;
சந்திரன் துயர் துடைக்க வழி சொன்னான்;
'கிருஷ்ணபக்ஷத்தில் நீ ஒளி குறைந்து மறைந்து,
சுக்லபக்ஷத்தில் ஒளி மிகுந்து விளங்குவாய்'.
சங்கரன் சொன்னான்,
சந்திரன் மகிழ்ந்தான்;

சந்திரன் வடிவமைத்து வழிபட்ட அந்த
சிவலிங்கமே, ஜோதிர்லிங்கத்தில் முதன்மையான
சோமநாதராகும்;

                                                                        ( தொடரும் )

2 comments:

  1. வணக்கம் அன்பரே சிவ புராணம் இன்னும் விரிவாக சொல்லுங்களேன்
    நோக்கும் ஈர்விழி நுகரும் மூவழி
    தகரும் இடர் உணரும் செவ்வழி
    கூர் செய்து இமயனவன் புராணம்
    இனிதாய் மனதில் பதிய

    ReplyDelete
  2. முயற்சிக்கிறேன் தினேஷ்;

    ReplyDelete