Wednesday, October 25, 2017

பொன்மாலைப் பொழுதில் 4

அடி அரேபியக் குதிரையே
வீட்டில் நீ அறியாத இடம் சமையலறையே
உனக்குப் பிடித்த இடம் சயனஅறையே
நீ செய்வதெல்லாம் நாள்முழுதும் நித்திரையே
உன் சோம்பலுக்கில்லை வரையறையே
தெரியுமடி,  நானொரு உதவாக்கரையே
ஆமாம், என்றும் இருந்ததில்லை உன் மேல் அக்கரையே
தலையில் நரையும் கண்ணில் திரையும் ...
சரி சரி கத்தி எதற்கிப்போ கண்மணியே
*தலையைக் குனியும் தாமரையே*

***

பலருக்கும் ஏணி
பார்வையில் அக்கினி
பழகினால் திகட்டாக் கனி
என் கவிதைகளின் எழுத்தாணி
உனை எண்ணிக்கிடப்பதே என் பணி
துன்பக் கடலில் நீ துணை வரும் தோணி
உனைத்தொடர முடியாது நிற்கிறேன் நாணி
உன்நலம் வேண்டித் துதிக்கையில் காதினில் 
*காலையில் கேட்டது கோவில் மணி*

***

மண்ணை முதலில் முத்தமிட்ட மழைத்துளி இது
என்று சொல்ல முடிவதில்லையே.

காதல் நெஞ்சுள் நுழைந்தது எக்கணமென்று
எடுத்துரைக்க ஏலவில்லையே.

கரையை முதலில் தொட்ட அலையிதுவென
கண்டு சொல்ல ஆளில்லையே.

*பூக்கள் பூக்கும் தருணம் - ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே*




***

உன் மொழி முறைப்பும் சிரிப்பும்
என் மொழி பொய்யும் புரட்டும்
சரி சரி
நிலவின் மொழி வளர்வதா தேய்வதா ?
கனவின் மொழி ஆசையா ஏக்கமா ?
காதலின் மொழி அன்பா அக்கறையா ?
ஊடலின் மொழி தண்டிப்பா மன்னிப்பா ?
கல்வியின் மொழி அடக்கமா அமைதியா ?
*காற்றின் மொழி ?*

***

No comments:

Post a Comment