Thursday, November 9, 2017

பொன்மாலைப் பொழுதில் 5

இன்று அதிகாலையிலேயே அவளின் தரிசனம்
ஆண்டவனுக்குத்தான் என் மேல் எவ்வளவு கரிசனம்.
என் இதயங்கவர்ந்தவள் இதமாய்
என்னிடம் பேசினாள்
எனை மிகவும் பிடித்திருப்பதற்கு ஏழெட்டுக் காரணங்கள் கூறினாள்.
இருவரும் இணைந்தே  இத்திருநாளைக் கொண்டாட
என்னவள் முத்தமழை பொழிய
இனி எல்லாப் பொழுதும் அய்யய்யோ ஆனந்தமே

***

காதலுக்கு அடுத்தக் கட்டம்
கண்தெரியும் தூரம் வரை நீயும் நானும் மட்டும்
என்னுள் நீயும் உன்னுள் நானும் தொலைந்து போகும் தருணம்
மனம் மயக்கும் மூலிகை வாசம்
பார்த்திராத புதுக்கோலம்
காண்போமா மண்ணுலகில் சொர்க்கம்
அருகிலேயே இருக்கு மூங்கில் தோட்டம்

***

அவன் நினைவையே நெஞ்சில் சுமந்துத் திரிந்தாள்
அவன் பெயரையே ஜபித்துக்கிடந்தாள்
அனவரதமும் அவனேயருகில் இருப்பதாய் எண்ணி நாட்கள் நகர்த்தினாள்
அவனைத்தவிர வேறாறோடும் பழக மறுத்தாள்
அவள் அன்பிற்குக் கட்டுப்பட்டு இதோ அருகில் அழைக்கிறான்
ராதைக்குப் புரியும் ரகசிய மொழியில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்
***

தென்றல் என்னை மெல்லத் தீண்ட
காதலலை நெஞ்சில் கரையேற முயல
சிந்தையில் காமம் நிரம்பி வழிய
தேகம் எங்கும் மோகம் வாட்ட
கண் திறந்திருந்தும் கனவு தெரிய
ஏக்கங்கள் ப்ரார்த்தனையாக
மாலையில் யாரோ மனதோடு பேச

***

மேகம் வாழ்த்த மழை பொழியும் 
மழை வாழ்த்த பூமி செழிக்கும்
பூமி வாழ்த்த வயல் விளையும்
வயல் வாழ்த்த வயிறு நிறையும்
வயிறு வாழ்த்த மனிதம் வாழும்
மனிதம் வாழ்த்த நட்பு சிறக்கும்
நட்புகள் வாழ்த்த எல்லாம் நலமாகும்
நலம் வாழ எந்நாளும் எம்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment