புடவை கருநீலநிறத்தில், உனக்குப் பிடிக்குமே
ப்ரேஸ்லெட் கையில், நீ பரிசாய்த் தந்தது
உதட்டுச்சாயத்தைத் தவிர்த்து விட்டேன், உனக்காக
பால்கோவா ரெடி, பாயசம் ரெடி
முதல் வருடம் தான் ஏமாற்றிவிட்டாய்
இம்முறை வாக்குதந்தவாறு வந்து விடு
உனக்காகக் காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்,
நீ வருவாய் என
***
உன்னுள் இல்லை அகங்காரம் ஆடம்பரம்
என்னுள் என்றும் உண்டு அபசாரம் ஆத்திரம்
தேவையேயிருந்ததில்லை உனக்கு அலங்காரம்
தினம் நான் புனைவேன் புதுப்புது அரிதாரம்
நீ அதரம் உதரம் கொண்ட வண்ணச் சித்திரம்
நகரும் காதல் சமுத்திரம்
என் அட்சரம் பிறக்கும் அட்சய பாத்திரம்
வாலில்லையே தவிர நானொரு அவதாரம்
உன் பொருமை அபாரம்
என் அபவாதத்திற்கு இதுவே அபராதம்
ஒருநாள் மறப்போம் நாம் நம் தராதரம்
அதன்பின் பற்றுவேன் உன் வளைகரம்
அதுவரையில் எனைச்சுற்றி எந்நேரமும்
மௌனமான நேரம்
***
மேகம் கருத்து இடியிடித்தது போதும்
மண் குளிரட்டும் இனி
பொழியாய் மழை பொழியாய் !
விதை தூவி நீரூற்றி வளர்த்தது போதும்
காய்க்கட்டும் இனி
மலராய் பூத்து மலராய் !
ஓடி உழைத்துப் பணம் சேர்த்தது போதும்
வாழ்வோம் இனி
வாராய் வாழ்வே வாராய் !
பேசிப் பழகி காதலித்தது போதும்
ஆடை பாரம் இனி
தீண்டாய் மெய் தீண்டாய்
***
மிதிலையின் மைதிலி நீ கம்பனின் நாயகி நீ
கண்ணனின் ராதை நீ ஆண்டாள் கோதை நீ
சகுந்தலை நீ அனுசுயை நீ
தினைப்புனம் காத்தத் திருவள்ளி நீ
அல்லி நீ மல்லி நீ
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
***
அடியே என்ப்ரிய சகி
நேற்று அவரென் வாசல் வந்தாரடி
மறந்தனையோ நீ ?
அன்று கோவிலில் பார்த்தோமே சந்தனத் தோள்களும் சங்கீதம் வாயிலும் ...
வாசல் வந்தவர் வனப்பில் எனைநான் மறந்தது உண்மையடி
பார்வையாலேயே எனைப் புசித்து விடுவது போல் பார்த்தாரடி
கள்ளச் சிரிப்போடு என்னவோ அவர் சொல்ல ஏதும் புரியாது நின்றேனடி
நாணத்தில் என்உடல் தழைய
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
***
ப்ரேஸ்லெட் கையில், நீ பரிசாய்த் தந்தது
உதட்டுச்சாயத்தைத் தவிர்த்து விட்டேன், உனக்காக
பால்கோவா ரெடி, பாயசம் ரெடி
முதல் வருடம் தான் ஏமாற்றிவிட்டாய்
இம்முறை வாக்குதந்தவாறு வந்து விடு
உனக்காகக் காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்,
நீ வருவாய் என
***
உன்னுள் இல்லை அகங்காரம் ஆடம்பரம்
என்னுள் என்றும் உண்டு அபசாரம் ஆத்திரம்
தேவையேயிருந்ததில்லை உனக்கு அலங்காரம்
தினம் நான் புனைவேன் புதுப்புது அரிதாரம்
நீ அதரம் உதரம் கொண்ட வண்ணச் சித்திரம்
நகரும் காதல் சமுத்திரம்
என் அட்சரம் பிறக்கும் அட்சய பாத்திரம்
வாலில்லையே தவிர நானொரு அவதாரம்
உன் பொருமை அபாரம்
என் அபவாதத்திற்கு இதுவே அபராதம்
ஒருநாள் மறப்போம் நாம் நம் தராதரம்
அதன்பின் பற்றுவேன் உன் வளைகரம்
அதுவரையில் எனைச்சுற்றி எந்நேரமும்
மௌனமான நேரம்
***
மேகம் கருத்து இடியிடித்தது போதும்
மண் குளிரட்டும் இனி
பொழியாய் மழை பொழியாய் !
விதை தூவி நீரூற்றி வளர்த்தது போதும்
காய்க்கட்டும் இனி
மலராய் பூத்து மலராய் !
ஓடி உழைத்துப் பணம் சேர்த்தது போதும்
வாழ்வோம் இனி
வாராய் வாழ்வே வாராய் !
பேசிப் பழகி காதலித்தது போதும்
ஆடை பாரம் இனி
தீண்டாய் மெய் தீண்டாய்
***
மிதிலையின் மைதிலி நீ கம்பனின் நாயகி நீ
கண்ணனின் ராதை நீ ஆண்டாள் கோதை நீ
சகுந்தலை நீ அனுசுயை நீ
தினைப்புனம் காத்தத் திருவள்ளி நீ
அல்லி நீ மல்லி நீ
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
***
அடியே என்ப்ரிய சகி
நேற்று அவரென் வாசல் வந்தாரடி
மறந்தனையோ நீ ?
அன்று கோவிலில் பார்த்தோமே சந்தனத் தோள்களும் சங்கீதம் வாயிலும் ...
வாசல் வந்தவர் வனப்பில் எனைநான் மறந்தது உண்மையடி
பார்வையாலேயே எனைப் புசித்து விடுவது போல் பார்த்தாரடி
கள்ளச் சிரிப்போடு என்னவோ அவர் சொல்ல ஏதும் புரியாது நின்றேனடி
நாணத்தில் என்உடல் தழைய
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
***
No comments:
Post a Comment