Monday, April 9, 2018

பொன்மாலைப் பொழுதில் 17

அருமைச் சிநேகிதா,
என் நிலைமை உனக்குச் சொல்லவா ?
தினம் நான் காத்திருக்கிறேன்
உனைப் பார்க்கும் வரை தவிக்கிறேன்
நெஞ்சம் படபடக்க நிதானமின்றித் திரிகிறேன்
யார் என்ன கேட்டாலும் எரிந்து விழுகிறேன்
கண்படு தூரத்தில் நீ இருக்கையில் கவலை மறந்து சிரிக்கிறேன்
உன்னோடு கை கோர்த்து நடந்திட நான் ஏங்குகிறேன்
எனை ஆளப்பிறந்தவன் நீயா என்று எனையே நான் கேட்டுக்கொள்கிறேன்
நீயாளப் பிறந்தவள் நானேயென்று நம்புகிறேன்
உன்னுள்ளும் உண்டா இப்பரவசம் என்று புரியாதுத் தவிக்கிறேன்
சொல்லி விட ஏங்குகிறேன்
இதுதான் காதலா ? சொல்லவா ? இன்றா ?
இதுதானா ... இதுதானா ... எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா ?

***

வான் மழை பொழியும் மூன்று மாதம்
சுடும் வெயில் தினம் சில மணி நேரம்
உண்ணும் வரை பசி இருக்கும்
காற்றில்லாப்பொழுது கொட்டும் வியர்வை
குளிர் இருக்கும் வரை போர்வை
அயர்ச்சியில் உறக்கம் ஆசையில் இறுக்கம் 
நமைச் சுற்றி நடக்கும் எல்லாமே
அவ்வப்பொழுது நடப்பவையே
உன் நினைவு மட்டும்
என்னோடு எல்லாப்பொழுதும் இருக்கிறதே
பிரகாசமாய் என்னுளமர்ந்து கொண்டு
எனை தினம் நீ பரவசப்படுத்துகிறாயே
நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே

***

என் அழகுச் சிநேகிதி
அழகனவன் அழகை வர்ணிக்கிறேன் கேளடி.
நீலப்பீதாம்பரத்தில் நின்றவன் கோலம்அழகு
நின்றபடியே வீசிய நேர்ப்பார்வை அழகு
பரவசத்தோடு பாசுரம் பாடியது அழகு
பதத்தோடு பாதமெடுத்து பரதமாடியது அழகு
நேற்றைய நாடகத்தில் அவன் நடிப்பு அழகு
சிரிப்பு அழகு, சிணுங்கியதெல்லாம் அழகு
கோதை ராதையின் கோபம் தீர்க்க பிரயத்தனப்பட்டது பரம அழகு
நயனம் திறவாது நடனமாடியது அழகு
கவர்ந்திழுக்குமவன் காந்தக் கண்ணுக்கு மை அழகு

***

No comments:

Post a Comment