Friday, August 1, 2014

ஒரு காலம்



தூளியில் தூங்கிக் கிடந்தது ஒருகாலம்
துக்கமேதுமின்றி துள்ளித் திருந்தது ஒருகாலம்
தூண்மறைவில் மறைந்து நின்று பேசியது ஒருகாலம்
தூரத்தில் நின்று ஏக்கத்தோடு பார்த்தது ஒருகாலம்
தூற்றுவாரையெல்லாம் துச்சமாய் மதித்து
தன் வழி சென்றது ஒருகாலம்,

சிவனையெண்ணி
சிவோஹம் எனச்சொல்லி
சிவபதம் கிட்ட
சிந்தித்திருப்பது இக்காலம்;  

1 comment:

  1. உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் பாராட்டியுள்ளேன்.
    இணைப்பு இதோ http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_5.html

    ReplyDelete