மாலை வேளையில் 
மலர்ச் சோலை மூலையில் 
மன்னவனே உனக்காக 
மங்கை நான் காத்திருந்தேன்;
கண்கவர் ஆடையிலே 
கவிதையொன்று சொல்லிக்கொண்டு 
காளை நீ வருவாயென்று 
கன்னி நான் காத்திருந்தேன்;
பூவினுள் நுழைந்து வண்டு 
புதுத்தேனை நிறையப் பருகி 
போதையில் பாதை புரியாது 
பறந்து திரிந்ததைப்  
பார்த்துச் சிரித்தேன்;
ஆண் மயிலும் பெண் மயிலும் 
ஒன்றையொன்று உரசிக்கொண்டும் 
ஒன்றோடொன்று மோதிக்கொண்டும்  
களித்துக் கிடந்ததைக் 
காணமுடியாது கண்டுகிடந்தேன்; 
நேரம் ஆக ஆக 
நீ அங்கு வராது போக 
எங்கோ ஒரு சோகப்பாடல் யாரோ பாட 
என் கண்ணிலிருந்து கண்ணீர் ஓட 
ஏனோ நான் உயிரில்லா உடல்போலே 
எழுந்து போனேன்;
வணக்கம்
ReplyDeleteதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்...
நாங்கள் எந்த கவிதை என்ற கண்டு பிடிப்பது கடினம் அதனால் இப்படி தலைப்பிட்டு போடுங்கள்
தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-