சும்மாயிருக்கேன்
ஏதும் எண்ணாது சும்மாயிருக்கேன்
எதையும் எண்ணக்கூடாது என்று எண்ணியவாறு சும்மாயிருக்கேன்
எதிரில் தெரிவது மரம் மாடு மனிதம் எல்லாம் ஒன்று என்று புரிந்தபடியால் சும்மாயிருக்கேன்
நீயும் நானும் சமம் என்று உணர்ந்தபடி சும்மாயிருக்கேன்
சும்மாயிருப்பதில் சுகமுண்டு
நீ என்ற நானும் சும்மாயிரு என்று சொல்ல எண்ணாது, நான் என்ற உன்னோடு சும்மாயிருக்கேன்
'முத்திடுச்சி' என்று முத்திரை குத்தலாம்
ஞானத்தின் பக்கம் என்றும் எண்ணலாம்
எது எப்படியோ நாமாகிய நான் சும்மாயிருக்கேன்
No comments:
Post a Comment