காய்கறிக் கடையில் கூட்டம்
பல் மருத்துவ மனையில் பலபேர்
முடி வெட்டும் கடையிலும் மூன்று நான்கு
பேர்
இரண்டு மூன்று நான்கு சக்கர வாகனங்கள்
பறக்கின்றன
பலமாய்ப் பேசி சிரித்தபடி
பள்ளி மாணாக்கர் பத்து பேர்
என்னதான் சொல்ல வருகிறான் பார்ப்போம்
என்று நீங்களும் தொடர்ந்து படிக்கிறீர்கள்
எல்லாவற்றிலும் ஏதாவது அர்த்தம் பொருள்
இருக்க வேண்டும்
என்பது அவசியமா என்ன,
உங்கள் வாழ்க்கையில் ?
No comments:
Post a Comment