சனிக்கிழமை காலை
தேவையில்லாதவற்றையெல்லாம்
தேடி எடுத்து வண்டியில் நிரப்பிக்கொண்டேன்.
முதல் நிறுத்தம் பழைய பேப்பர் கடை
போட்டதுக்குக் கிடைத்தது இருபது ரூபாய்
வாங்கிக் கொண்டு
தொடர்ந்து செல்ல டைலர் கடை
தைக்கக் கொடுத்து
தைத்ததை வாங்கிக் கொண்டு
அடுத்து நின்றது கோதுமை வாங்க
அங்கேயே தள்ளுவண்டியில் வாழைப்பழம்
தொடர்ந்து சென்று குக்கர் ரிப்பேர்
கொஞ்ச தூரத்தில் காய்கறி கடை
அதற்கடுத்து யூ டர்ன்மாவு மில்லில், வாங்கிய கோதுமையை மாவாக்கி என்னாச்சி போன வாரம் ரிப்பேருக்குக் கொடுத்த மிக்சி
என்று கடைகாரருக்கு நினைவுபடுத்தி
எனக்குப் பிடிக்குமேயென்று சூடாய் வடை வாங்கிக்கொண்டு
வீட்டிற்கு வந்து 'இன்று நூறு ரூபாய் மிச்சம்'
என்று சொல்லும் மனைவியிடம்
இருநூறு ரூபாய் பெட்ரோல் செலவு
என்று சொல்ல முடியாது,
கவிதைக்குக் கரு கிடைத்த மகிழ்ச்சியில்
சிரித்து வைத்தேன், எப்பொழுதும்போல்.

No comments:
Post a Comment