காலைல கண்முழிச்சு 
கைப்பேசி ல வாட்ஸாப் சாட் லா நெரப்பிக்கிட்டு
கடமையாற்றக் கெளம்பி 
கரிக்டா ஒன்பது மணிக்கு சீட்ல ஒக்காந்து
கம்ப்யுட்டர் தொறந்து 
மெயில் லா படிச்சிட்டு 
வாட்ஸாப் பாத்து சிரிச்சிட்டு 
ஓசி ல வச்ச காபி, டீ, ஹார்லிக்ஸ குடிச்சிட்டு
(ஏதாச்சு ஒண்ணுதாங்க)
சாப்பாட்டு நேரம் ஆகும் வரை 
அந்த சைட் இந்த சைட் ன்னு (வெப்சைட்ட
சொன்னேங்க) பாத்துட்டு 
ஒலக நியூஸ் ல படம் பாத்துட்டு
சாப்பாடு முடிச்சி 
லைட்டா முழிச்சிக்கிட்டே கண்ணை மூடி
தூக்கத்த தொரத்த பாடுபட்டு 
மறுபடி வாட்ஸாப் கனெக்ட் பண்ணி 
உருப்படியா எதுவு வந்திருக்காதுன்னு
தெரிஞ்சு 
மறுபடி ஒருக்கா செக் பண்ணிட்டு 
'ப்ரீயா தந்தா பினாயிலையு குடிப்பியே'ன்னு
மொறைக்குற 
பாண்ட்ரி பையனை கண்டுக்காம
இன்னு கொஞ்சம் காபி, டீ, ஹார்லிக்ஸ குடிச்சி
வச்சி (இப்போவு ஏதாச்சு ஒண்ணுதாங்க)
போறவர்றவங்களை பாத்துக்கிட்டே 
ஒலக விசயம் அலசி,
மறுபடி அந்த சைட் இந்த சைட் ன்னு (இப்பவு
வெப்சைட்ட தா சொன்னேங்க) பாத்துட்டு
நேரம் சரியாத்தா ஓடுதா ன்னு சந்தேகம்
வந்து 
வேர்ல்ட் டைமோட ஒருதபா வெரிஃபை பண்ணிட்டு
ஆறுமணி ஆகையில 
ஒருவேளையு இன்னிக்கி பண்ணலியேன்னு கவலையே
படாம 
நேத்து என்ன கிழிச்சோம்னு சமாதானம் சொல்லிக்கிட்டு,
அவசரமா போகணும்னு கெளம்பி 
ஆறஅமர வீட்டுக்குப்போயி உட்கார்ந்தா
'என்னாங்க டயர்டா இருக்கீங்களே, வேலை
அதிகமா ?' ன்னு 
பொண்டாட்டி கேக்கும்போது, 
ஒரு பயம் வரும் பாருங்க ...
இதுக்கு
பேருதா மனசாட்சி யா ?
haahaahaa entertaining.. sharing it in my fb :)
ReplyDeleteவிஸ்வநாதன் வேலை வேண்டும். சாங்கை டெடிகேட் பண்றேன் ஹிஹிஹி
ReplyDeletenandri.
Delete