காலை வேளையில் 
கைகளை நன்றாய் வீசி 
நடைப்பயிற்சி செய்வோரைப் பார்க்கும்போதெல்லாம்
*
ஒரு ஓரமாய் அமர்ந்து 
தன் இஷ்டம்போல் 
யோகாசனம் செய்து சுகிப்போரைப் பார்க்கும்போதெல்லாம்
*
மிதிவண்டியில் இங்குமங்கும் 
மின்னல் போல் பயணித்து
மகிழ்வோரைப் பார்க்கும்போதெல்லாம் 
*
நாலு ஐந்து மாடியாயினும் 
சளைக்காமல் சரசரவென்று 
ஏறி இறங்குவோரைப் பார்க்கும்போதெல்லாம்
கோபம் கோபமாய் வருகிறது.
*
பசித்தப்புலி இவர்களையும் 
புசிக்கட்டும் என்று 
சாபமிடத் தோன்றுகிறது.
*
வாழ்வை நீட்டிக்கவும் 
வாழ்கையில் நலமாய் வாழவும் 
இவர்கள் செய்யும் இச் சேட்டைகள் 
விசித்திரமாய் இருக்கிறது.
*
அதேசமயம்  
என்னைச் சேர்ந்த 
எவரும் இவ்வாறெல்லாம் செய்வதில்லை 
என்பதை அறிந்து 
மனம் அமைதிக்கொள்கிறது 
*
ஆமென். 
Fact
ReplyDeleteஅடேயப்பா. இவ்ளோ லேசினெஸா :)
ReplyDeleteசும்மா இருக்கறது சாதாரண விடயம் இல்லே, மேடம்.
Delete