ஏன் இப்படி ...
என்னைச் சுற்றியே வருகிறாயே ...
கை கால் இடை முகம் எல்லாவிடமும்
நீ முத்தமிட்டத் தடம்
ஒரு சின்ன இடுக்கு கிடைத்தாலும் போதும்,
நுழைந்து விடுகிறாய்.
காலையில் கண்டுகொள்ளமாட்டாய்,
இரவில் தூங்கவிடமாட்டாய்;
சத்தமில்லாது வருவாய்,
சங்கீதம் இசைப்பாய்;
சங்கடத்தில் நெளியவைப்பாய்.
விழி விரித்துத் தேட
உனைக் காணாது விளிக்கும்,
நெஞ்சம் படபடக்கும்;
இன்றாவது எனைத் தூங்கவிடு;
என் உறக்கம் கலைக்காது எனை உறங்க விடு .... கொசுவே;
என்னைச் சுற்றியே வருகிறாயே ...
கை கால் இடை முகம் எல்லாவிடமும்
நீ முத்தமிட்டத் தடம்
ஒரு சின்ன இடுக்கு கிடைத்தாலும் போதும்,
நுழைந்து விடுகிறாய்.
காலையில் கண்டுகொள்ளமாட்டாய்,
இரவில் தூங்கவிடமாட்டாய்;
சத்தமில்லாது வருவாய்,
சங்கீதம் இசைப்பாய்;
சங்கடத்தில் நெளியவைப்பாய்.
விழி விரித்துத் தேட
உனைக் காணாது விளிக்கும்,
நெஞ்சம் படபடக்கும்;
இன்றாவது எனைத் தூங்கவிடு;
என் உறக்கம் கலைக்காது எனை உறங்க விடு .... கொசுவே;
No comments:
Post a Comment