Wednesday, February 5, 2014

எதிரில் சிங்கம்

தூரத்திலிருந்துப் பார்த்தேன்
எதிரில் ... ஒரு சிங்கம்;

முறைத்தேன், முறைத்தது;

‘ஒரு கை பார்த்திடுவேன் உன்னை’
எச்சரித்தேன்;

‘நானும் ஒரு கை (கால்) பார்த்திடுவேன்’
சிங்கம் சிங்கத்தின் மொழியில் எச்சரித்தது;

கிட்டே போனேன்,
முட்ட வந்தது;

கண் நன்றாய்த் திறந்து பார்த்தேன் ...

என் முன்னாடி ....
முகம் பார்க்கும் கண்ணாடி;

..........

வந்ததே கோபம் எனக்கு;

மியாவ் என்று கர்ச்சித்து
திரும்பத் தூங்கிவிட்டேன்;

2 comments:

  1. ஹா... ஹா... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    http://samudrasukhi.blogspot.in/2014/02/106.html மூலம் உங்கள் தளம் வருகை... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. HTMLன் சூப்பர் ஸ்டார் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி;

      Delete