மனிதனின் மூன்று குணங்களைக் குறிக்கும்,
சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்,
மூன்று பிறப்புக்களின் பாவங்களைப் போக்கும்,
சூலாயுதம் போன்று
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ உனக்கு அர்ப்பரிக்கிறேன்.
தூய்மையான, இலகுவான,
எந்தக் குறையும் இல்லாத
முழுமையான
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ உனக்கு அர்ப்பரிக்கிறேன்.
நந்தியை வணங்கி, பின்னே
உன்னை சரணடைகிறேன்,
எங்கள் பாவங்களைப் போக்கும்,
பரமேஸ்வரா,
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.
நல்லச் செயல்களையே செய்வதால்
கிட்டிய புண்ணியத்தை விடவும்,
சாலிக்ராமம் அளிப்பதால்
கிட்டிய புண்ணியத்தை விடவும்,
புண்ணியம் அளிக்கும்
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை
இறைவ,
உனக்கு அர்ப்பணித்து வணங்குகிறேன்;
அளிப்பதை விடவும்,
அஸ்வமேதயாகம் செய்வதை விடவும்,
ஒரு பெண்ணிற்கு மணம் செய்து வைப்பதை விடவும்,
உயர்ந்த பலன் தரும்
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.
மகாவிஷ்ணுவின்
மனைவி மகாலக்ஷ்மி படைத்த,
மகேஸ்வரனுக்குப் பிடித்த
வில்வ மரத்தின்
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
மகேஸ்வரா,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.
வில்வ மரத்தைக் கண்டால்,
மனதால் நினைத்தால்,
தொட்டால்
நம் பாவங்கள் மறையும்.
அத்தனை சக்தி வாய்ந்த
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.
காசியில் வாழ்ந்து,
காலபைரவரை தரிசித்து,
அலகாபாத் கோவிலில் வழிபட்டதன்பின்
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.
வில்வ இலையின்
அடிப்பாகம் பிரம்மம்,
நடுப்பாகம் விஷ்ணு,
தலைப்பாகம் சிவம்;
இத்தனை சிறப்பு வாய்ந்த
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.
சிவனுக்குப் பிடித்த இந்த
பில்வாஷ்டகத்தை
அவன் முன் சொல்வோர்
எல்லாப் பாவங்களும் நீங்க
சிவலோகத்தில்
சிவனோடு இருக்கும்
சித்தம் பெறுவர்.
No comments:
Post a Comment