Monday, January 20, 2014

பவானியஷ்டகம்


தங்கை, தாய்
உறவினர், நண்பர்,
பிள்ளை, பெண்,
வேலையாள், கணவன் / மனைவி,
ஞானம் அறிவு
இவையேதும் எனைக் காக்காது;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (1)

பிறப்பு இறப்பு என்ற இக்கடலில்
சிக்கிக் கிடக்கிறேன்;
பயம் நிறைய உண்டு;
சிக்கலை எதிர்த்து நிற்க தைரியம் இல்லை;
ஆசை மோகம் அத்தனையும் உள,
அதனால் செய்த குற்றங்கள் பல;
கட்டுண்டு கிடக்கிறேன்,
கரையேற இயலாது;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (2)

தானங்கள் ஏதும் அறியேன்;
தவம் செய்யத் தெரியேன்;
மாயம் தந்திரம் அறியேன்;
பாடல்கள் புனைந்து பக்தியில் திளைக்கத் தெரியேன்;
பூஜை செய்யத் தெரியாது;
யோகம் செய்யத் தெரியாது;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (3)

எது சரியென்று தெரியாது;
புண்ணியத் தீர்த்தங்கள் அறியேன்;
முக்தி பெரும் சக்தி இல்லான்;
ஆண்டவனிடம் அடைக்கலமாகும் உபாயம் அறியேன்;
பக்தியில் பரவசம் அடையும் வழி அறிந்திலேன்;
விரதம் அனுஷ்டிக்கும் வழிமுறை அறியேன்;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (4)

கெட்ட செயல் செய்தவன்,
கெட்டவர்களோடு இணைந்துக் கிடந்தவன்,
கெட்ட பாவ விசயங்களையே எண்ணிக் கிடந்தவன்,
கெட்டவர்களுக்கு தொண்டு செய்திருக்கிறேன்,
கெட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்,
கெட்ட எண்ணத்திலேயே எல்லாவற்றையும் சிந்தித்தவன்,
எல்லாசமயத்திலும் எதிலும் கெட்டதிலே மூழ்கிக்கிடந்தவன்;

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (5)

படைத்தவனை அறிந்திலேன்;
ஐஸ்வர்யம் அள்ளித் தரும் அன்னையை அறியேன்;
எல்லாவற்றுக்கும் தலைவன் யாரெனத் தெரியாது;
தேவர்களுக்குத் தலைவன் யாரெனத் தெரியாது;
காலை விடிவதற்குக் காரணம் கண்டேனில்லை
இரவு இருண்டு இருப்பதற்கு விவரம் அறிந்தேனில்லை;
எப்பொழுதும் போல்

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (6)

விவாதங்களில் வீற்றிருக்கும் போதிலும்,
எதிரிகள் சூழ்ந்திருக்கும் போதிலும்,
கவலை எனை கவ்வியிருக்கும் போதிலும்,
துன்பத்தால் துயரத்திலிருக்கும் போதிலும்,
எவ்வளவு தூரம் சென்ற போதிலும்,
நீரிலும், நெருப்பிலும்,
மலைகளின் உச்சியிலும்,
அடவிகளின் இருளின் இடையிலும்,

எப்பொழுதும் போல்
பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (7)

அனாதையான போதிலும்,
ஏதுமில்லாது நின்ற போதிலும்,
பிணிகளால் பின்னப்பட்ட போதிலும்,
பாவமான நிலையில் பரிதவித்தப் போதிலும்,
பலதரப்பிலிருந்தும் பிரச்சனைகள் எனைச் சூழ்ந்த போதிலும்,

பவானி மாதே, உன் பாதம் பணிகிறேன்,
துணை நீயே, காக்க வேணும் தாயே; (8)

Thursday, January 16, 2014

பெருங்சிக்கல்

காலையில் கண் விழித்ததும் உன் நினைவு ... நீ வரவில்லை

பல் தேய்க்கையில் தயாராயிருந்தேன் ... நீ வரவில்லை

குளிக்கையிலும் நெஞ்சம் முழுதும் நீ தான் ... நீயோ கண்டுகொள்ளவில்லை;

யோகா செய்வதெல்லாம் எனக்காக அல்ல, எல்லாம் உனக்காகத்தான்;

சிற்றுண்டி சமயத்திலும் உன் சோதனை;

உன் சிந்தனையில் நான் சிக்கித்தவிக்க, நீ எங்கோ சிக்கியிருக்க ...
....
....
....
மலச்சிக்கல் பெருங்சிக்கல்

Monday, January 13, 2014

ஆசிரியர் தினம்

(ஆசிரியர் மாணவர்களிடம்)
நா ஒரு குழில விழுந்துட்டா என்ன பண்ணுவீங்க ?
......
ரமேஸ், நீ சொல்லு
சார் நீங்க வெளில வர எவ்ளோ நேரமாவுதுன்னு கவனிப்பே;
சார் நா இவ மாதிரி சும்மா இருக்கமாட்டே;
வெரிகுட் மகேஷ், நீ என்னபண்ணுவே ?
மண்ணை போட்டு அந்த குழிய நெரப்பிடுவே
அடப்பாவி, சுரேஷ், நீ சொல்லு, 
சார் நா விளையாடப் போய்டுவே
ஏன் ? எப்புடி ?
மகேஷ் மண்ணப் போடுவா, அதனால நீங்க மூச்சி திணறி மண்டையப் போடுவீங்க, அதனால் ஸ்கூல் லீவ் விடுவாங்க, அதனால நா விளையாடப் போய்டுவே;
சார் இவங்க எல்லா நன்றி கெட்ட ஜென்மங்க சார்
தேங்க்யு சிவா, நீ என்ன பண்ணுவே ?
சுதந்திர நாள்ல நீங்க எங்களுக்கு சாக்லேட் கொடுத்தீங்க, அப்டி இப்டி நீங்க செத்துப் போனா எல்லாருக்கு நா சாக்லேட் கொடுப்பே;
கவலையா தெரிரீயே சண்முகம், ஏம்பா ?
நீங்க விழுந்த குழிய வெட்டுனவனுக்கு காசு எப்டி தர்றதுன்னு கவலை சார் எனக்கு
அப்போ என்ன யாருமே கை குடுத்து காப்பாத்தமாட்டீங்க ?
நா காப்பாத்துவே சார்
வெரிகுட் கோபால், வெரிகுட், அப்டி என்னை காப்பாத்துனா ஒனக்கு நா ஒரு வரம் தந்தா நீ என்ன கேப்பே ?
இந்த ஸ்கூல விட்டு நீங்க போய்டுவேன்னு வரம் தந்தா நா காப்பாத்துவே;

Friday, January 3, 2014

BILVASTAGAM / வில்வாஷ்டகம்


மனிதனின் மூன்று குணங்களைக் குறிக்கும்,
சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்,
மூன்று பிறப்புக்களின் பாவங்களைப் போக்கும்,
சூலாயுதம் போன்று
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ உனக்கு அர்ப்பரிக்கிறேன்.

தூய்மையான, இலகுவான,
எந்தக் குறையும் இல்லாத
முழுமையான
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ உனக்கு அர்ப்பரிக்கிறேன்.

நந்தியை வணங்கி, பின்னே
உன்னை சரணடைகிறேன்,
எங்கள் பாவங்களைப் போக்கும்,
பரமேஸ்வரா,
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.

நல்லச் செயல்களையே செய்வதால்
கிட்டிய புண்ணியத்தை விடவும்,
சாலிக்ராமம் அளிப்பதால்
கிட்டிய புண்ணியத்தை விடவும்,
புண்ணியம் அளிக்கும்
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை
இறைவ,
உனக்கு அர்ப்பணித்து வணங்குகிறேன்;

ஆயிரம் யானைகளை தானமாய்
அளிப்பதை விடவும்,
அஸ்வமேதயாகம் செய்வதை விடவும்,
ஒரு பெண்ணிற்கு மணம் செய்து வைப்பதை விடவும்,
உயர்ந்த பலன் தரும்
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.

மகாவிஷ்ணுவின்
மனைவி மகாலக்ஷ்மி படைத்த,
மகேஸ்வரனுக்குப் பிடித்த
வில்வ மரத்தின்
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
மகேஸ்வரா,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.

வில்வ மரத்தைக் கண்டால்,
மனதால் நினைத்தால்,
தொட்டால்
நம் பாவங்கள் மறையும்.
அத்தனை சக்தி வாய்ந்த
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.

காசியில் வாழ்ந்து,
காலபைரவரை தரிசித்து,
அலகாபாத் கோவிலில் வழிபட்டதன்பின்
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.

வில்வ இலையின்
அடிப்பாகம் பிரம்மம்,
நடுப்பாகம் விஷ்ணு,
தலைப்பாகம் சிவம்;
இத்தனை சிறப்பு வாய்ந்த
மூன்று இதழ்களைக் கொண்ட
இந்த வில்வ இலையை,
இறைவ,
உனக்கு அர்ப்பரிக்கிறேன்.

சிவனுக்குப் பிடித்த இந்த
பில்வாஷ்டகத்தை
அவன் முன் சொல்வோர்
எல்லாப் பாவங்களும் நீங்க
சிவலோகத்தில்
சிவனோடு இருக்கும்
சித்தம் பெறுவர்.

Wednesday, January 1, 2014

நாய்

’பேர் என்ன ?’

’சிங்கமுத்து’

’என்ன பண்றே ?’

’புலிகள் காப்பகத்துல வாட்ச்மேன்’

’அது என்ன கழுத்துல ?’

’புலிப்பல்’

’கைல என்ன ?’

‘யானை முடி’

’எங்கேர்ந்து வர்றே ?’

’சிம்ம சொப்பனம் படம் பாத்துட்டு வரே’

’எங்கே போறே ?’

’புலியூருக்கு’

’இங்கே எதுக்கு நிக்கறே ?’

’நாய் குலைக்குது, பயமா இருக்கு’