ந | நாகங்களே நகையாய்,நெற்றியில் ஒரு கண்ணோடு,உடலெங்கும் திருநீறு பூசிஎல்லோரையும் ஆள்பவனாய்என்றும் எளியவனாய்எங்கட்கு அருள்பாலிக்கும் பரமேஸ்வராஉன் பாதம் பணிகிறேன்; | |
ம | மந்தாகினி நீரினால் அபிஷேகம், ஆராதனை,மந்தாரை மலரால் ஆனந்த அர்ச்சனைசந்தனப் பூச்சு இவற்றால் ஜொலிக்கும் எங்கள் தேவா,நந்தி தேவர் மற்றும் பலருக்குத் தலைவா,உன் பாதம் பணிகிறேன்; | |
சி | சிவந்த ரூபிணி பார்வதியின் பதியே,தக்ஷனின் கர்வம் அழித்த மகாநிதியே,நல்லோரைக் காக்க நஞ்சுண்ட நீலகண்டா,விடையே கொடியாய்க் கொண்டவிருடவாகனா,உன் பாதம் பணிகிறேன்; | |
வா | வசிட்டர் அகத்தியர் ஆகியோர்வணங்கிய தேவா,தேவர்கள் வணங்கும்திருலோச்சனா,சூரிய சந்திர நெருப்பைமுக்கண்ணாய்க் கொண்டமுக்கண்ணா,உன் பாதம் பணிகிறேன்; | |
ய | யக்ஷ சொருபனாய்*,ஜடாமுடி தரித்தவனாய்பினாக வில்லை ஏந்தியவனாய்என்றும் எங்களைக் காப்பவனாய் விளங்கும் திகம்பராஉன் பாதம் பணிகிறேன்; |
Wednesday, June 12, 2013
சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment