Monday, February 20, 2012

மகா சிவராத்திரி



     


எங்கும் இருள்;
எனினும் எந்தக் கவலையுமில்லாமல்,
அச்சமின்றி
அமைதியாய் இருந்தேன்;

மனதில் மட்டும்
சொன்னதையே சொல்லிக்கொண்டு வந்தேன்;

எங்கோ குறைக்கும் நாய்;
அமைதியாய் இரு என்று
அன்பாய் அதட்டினேன்;

மழை வராப்பொழுது;
காற்று கொஞ்சம்;
குளிர் கொஞ்சம்;
உறங்காது விழித்திருந்தேன்;

தெரிந்தே தவறேதும் செய்யவில்லை;
இனி செய்யப்போவதுமில்லை;
என்றும் நீ துணை வர
எந்நேரமும் எண்ணி இருப்பேன் உன்னையே;
உன் பெயரை சொல்லி வந்தேன்;

சொல்லச் சொல்ல அமைதி; அந்தச்
சொல்லே நமக்கு வெகுமதி;

ஓருடலாய்
ஈருயிராய்;

முக்கண்ணோடு
நாற்புறமும் காப்பவனே,
ஐந்தெழுத்து மந்திரத்தை
உச்சரிப்போர்க்கு, வற்றாத
ஆறாய் அருள் வாரி வழங்குவோனே,

ஓம் நமசிவாய !

Wednesday, February 8, 2012

சிவபுராணம் - 9

                                    காசி விஸ்வநாத்

வாரணாசி அல்லது காசி
என்றழைக்கப்படும் இவ்விடமே
7வது ஜோதிர்லிங்கம் அமைந்த இடமாகும்.


வாரணாசி,
இந்துக்களின் மிகப்புனிதமான
இடம்.
பிரம்மா தேவன் கடுந்தவம்
செய்த இடம்.
பிரள காலத்தில் கூட
அழியாது சிவன் காத்த இடம்.
உத்திரப் பிரதேசத்தில்
உள்ள ஒரு இடம்.
புனிதமான கங்கை நதியின்
மேற்குக் கரையில் கோவில் கொண்ட இடம்.

உலகத்திலேயே
மிகப் பழமையான ஊர்
இதுவே ஆகும்.

ஜோதிர்லிங்கமாய் சிவன் அருள் தரும்
இவ்விடத்தில் இவன் பெயர்
விஸ்வநாதா அல்லது விஷ்வேஸ்வரா.
இதன் பொருள்
இவ்வுலகத்தை ஆள்பவன் என்பதாகும்.

முகலாயர் ஆதிக்கத்தில்
இந்தக் கோவில் பல முறை சிதைக்கப்பட்டும்
மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு இன்றும்
கம்பீரமாய் நிற்கிறது;
இந்தக் கோவிலின் மிக அருகில்
மசூதி ஒன்று உள்ளது;
அந்த மசூதி இருக்கும் இடமே
கோவிலிருந்த இடம் என்று
சொல்லப்படுகிறது;
ஜோதிர்லிங்கத்தைத் தவிர்த்து
இந்தக் கோவிலில்
இன்னும் பல சன்னதிகள்
இருக்குது;
இந்தக் கோவிலில்
இருக்கும் ஞானவபி என்ற குளத்தில்
மூர்த்தியை ஒளித்து வைத்து
முகலாயரிடமிருந்து காத்ததாய்
சொல்லப்படுகிறது;


காசி விஸ்வநாதரை தரிசிப்போம், நம்
கவலை எல்லாம் தீரும்
வளமாய்
வாழ்ந்திடுவோம்;

                                                                        ( தொடரும் )

Tuesday, February 7, 2012

சிவபுராணம் - 8

                                    பீமாஷங்கர்

அருள் அள்ளித்தரும்
அந்தச் சங்கரனின்
ஆறாவது ஜோதிர்லிங்கம்
இந்த பீமாஷங்கர்.


ராமாயணக் காலத்தில்
ராமனால் கொல்லப்பட்டவர்கள்
ராவணனும் கும்பகர்ணனும்;

சகாயத்ரி மலையில்
கார்கடி என்ற அரக்கி
வாழ்ந்து வந்தாள்;
இவள் கும்பகர்ணனின்
மனைவி ஆவாள்;
இவர்கட்குப் பிறந்த பிள்ளை
பீமன், கார்கடிக்கு துணையாய்
இருந்து வந்தான்;

ஒருநாள் பீமன் தாம்
ஒதுங்கி ஓரமாய் வாழ்வதெதற்கு
என்று வினவ,
கார்கடி அவன் தந்தை பற்றி
அவனுக்கு சொல்ல,
அதைத் தொடர்ந்து
ராமன் கும்பகர்ணனைக் கொன்றதை
அவனுக்கு விளக்க,
தந்தையைக் கொன்றவன்
தலையை எடுப்பேன் என்று
தனயன் கிளம்ப,
தன் செயலுக்கு வலிமை சேர்க்க வேண்டு
பிரம்மனை நோக்கித் தவமிருக்க,
பிரம்மனும் அவனுக்கு
வலிமை கிட்டும் என
வரம் தர,
வலிமை பெற்றவன்
வானவர்களை
வம்புக்கிழுத்து
வதைத்தான்.


இதற்குப் பிறகு
காமரூபன் என்ற அரசனை,
சிவ பக்தனை
எதிர்த்துப் போர் புரிந்தான்;
போரில் வெற்றி பெற்றான்;
அரசனை சிறையிலடைத்தான்;
அரசன், சிறையிலிருந்தாலும்
சிவனை இடைவிடாது
துதித்தான்;
அரசன் செயலை
அரக்கன் கேள்விப்பட்டான்;
அவனை கொன்றுவிடுவதென
அக்கணமே கிளம்பினான்;
காமரூபன் பூசை செய்யும் சிவலிங்கத்தை
இரண்டாய் பிளக்கத்
தன் வாளை உருவினான்;
லிங்கத்திலிருந்து சிவன் தோன்றினான்;
தன் சூலாயுதத்தால்
பீமனின் தலையைத் துண்டித்தான்;

தேவர்கள் மகிழ்ந்தனர்;
பீமனைக் கொன்ற சங்கரனை
அங்கேயே லிங்க வடிவத்திலிருந்து
அருள் பாலிக்க வேண்டினர்;
சிவனும் சம்மதித்தான்;
அனைவருக்கும் ஆசி தந்தான்;

இவனே பீமாசங்கரன்;

பீமனைக் கொன்றவன் இவன்
பிழை தீங்கு செய்தாரை இல்லாது செய்தவன் இவன்
பாசம் தந்தாரை ஆட்கொள்பவன் இவன், அவனே
பீமஷங்கர் என்று புகழப்பெற்ற சிவன்.

                                                                        ( தொடரும் )