Friday, December 8, 2017

பொன்மாலைப் பொழுதில் 7

இடை அளக்க வருவேனென்று
இமை மூடாது காத்திருக்காயோ !
விரலிணைத்து விளையாட வருவேனென்று
விழி மூடாது காத்திருக்காயோ !
காதல் கவிதைகள் சொல்லியுனை
பரவசப்படுத்துவேனென்று
கனவுகளோடு பலவோடு காத்திருக்காயோ !
கண்களால் அழைத்து, காதினுள் முத்தமிட்டு
கேட்டுத் தொட்டு, கேட்காது முட்டி ..... ம்ம்ம்
ஏதும் மறவாது எனக்காக காத்திருக்காயோ !

நானுந்தானடி காத்திருக்கேன்
நாளை வரும் நாளை எண்ணிக் காத்திருக்கேனடி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி

***

அந்த அளவுக்கு இல்லை ஞானம்
இருப்பதைக் கொண்டு எழுத வேணும்
உன்னைப் பற்றி என்பதால் வார்த்தைகள் தானே வந்தமரும்
தினம் ஒரு சிலவரி வசனம்
பிடித்திருந்தால் வரும் விமர்சனம்
எது எப்படியோ எனக்கு நீயே பிரதானம்
என் பாடுபொருளெல்லாம் உன் புராணம்
நெஞ்சிலுண்டு உனக்கோர் உயர்ந்த ஆசனம்
பார்த்து ரசித்ததுண்டு நடையிலே அன்னம்
உன் விழிகள் ஆடும் நர்த்தனம் நாட்டியம்
உன் யவ்வனம் என் கவிதைக்குத் தீவனம் 
உன்னுளுண்டு அநுதினம் ஒரு நறுமணம்
அதன் ரகசியத்தை நீ செப்பனும்
என் அனுமானம் உன் ரண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்

***


கனவு கலையும், பொழுது விடியும்
கைப்பேசி வழி உன் காலை வணக்கம் வரும்
பறவைகள் படபடவென்று சிறகடித்துப் பறந்துத் திரியும்
அலுவலகம் வந்தபின் 'இன்றென்ன எழுத?' என்றெண்ணம் உதிக்கும்
எதைச்சொன்னால் நீ ரசித்துச் சிரிப்பாய் என்று யோசிக்கத் தோன்றும்
கண்மூட மேகம் நீர்வீழ்ச்சி மலர்ச்சோலை இவையெல்லாம் வந்து போகும்
மனக்கண்ணுள் உன் முகம் தெரியும்
அவ்வமயம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

***

No comments:

Post a Comment