வேலை நாட்களில் வாளித்துணியை
அவசரஅவசரமாய் காயப்போடுகிறாய்.
வார விடுமுறையெனில் வாயில் பிரஸ்ஸோடு
பத்துமணிக்கு பால்கனியில் நிற்கிறாய்
கூந்தலில் டவல் சுற்றி பின் தட்டி துடைத்து
வாரி
உதிர்ந்த முடிகளை பால்கனிவெளியே வீசி விடுகிறாய்.
போன் பேசிக்கொண்டே நடக்கிறாய், சிரிக்கிறாய், அவ்வப்பொழுது
இங்கே அங்கே இழுத்து மறைத்து கொல்கிறாய்
அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும்
அரைகுறை ஆடையோடு தரிசனம் தருகிறாய்.
எத்துணை டூயட்டுகள் உன்னோடு பாடியிருக்கிறேன்.
ஒருநாள் டை அடிக்க மறந்துவிட்டேன், அதற்காக
?
அண்ணா என்றழைத்திருந்தாலும் பொறுத்துக்கொண்டிருப்பேன்
அங்கிள் என்று சொல்லிவிட்டாயே, சே ...