Sunday, July 2, 2017

வெயில் அடுத்து மழை



செருப்புக் கடையில் சிலர்
நெருப்பு பறக்கும் சாணைக் கடையில் சிலர்

பழக்கடையில் பேரம்பேசியப்படி சிலர்
முழம் பூ வாங்கிச் சூடியப்படி சிலர்

அடிவாங்கி அழுதப்படிச் செல்லும் சிலர்
நெடியுணர்ந்து வழி மாற்றிச் செல்லும் சிலர் 

இவையெல்லாம் பார்த்து ரசித்தபடி நான்
இப்பொழுதெல்லாம் இப்படித்தான்

சம்மந்தமே இல்லாது கவிதை வருகிறது,
கடும் வெயிலைத்தொடர்ந்து பெய்யும் இம்மழை போலே.

2 comments:

  1. வித்தியாசமான பகிர்வு...

    தங்களை தொடர்வதில் மகிழ்ச்சி...

    ReplyDelete