Sunday, June 25, 2017

எல்லா நாளும் ஒன்றே

காலை விடியல்
சாலையில் வாகனங்கள்
நேற்றமர்ந்து அளவாடியவர் இன்றும்

நேற்று போல் இன்றும்
திரைச்சீலை திறக்கும் சிலர்
திரைச்சீலை மறைக்கும் சிலர்

குளிக்காது சமையல் செய்யும் சிலர்
குளித்து பூஜை செய்யும்  சிலர்
டீவி முன்னமர்ந்து நாள் கடத்தும் சிலர்

ரம்ஜான் நேற்றா நாளையா?
ஆஷாட ஏகாதசியா ஆடுநரி ஏகாதசியா ?
சிவராத்திரியா நவராத்திரியா ?

எந்த வித வேறுபாடுமின்றி
எல்லா நாளும் ஒன்றாய்க் கழியுது பலபேருக்கும்
எனக்கும்.

2 comments: