அழுக்காக்கிய ஆடையை,
நீரில் நனைத்துத் துவைத்துக் 
காய வைத்தேன்.
காய வைத்த ஆடையிலிருந்து 
தனியே பிரிந்திருந்தது
ஒரு நூல்.
தனியே பிரிந்திருந்த நூலிலிருந்து 
பனித்துளி போல் நீர்
சொட்டு சொட்டாய்க் கொட்டியது.
சொட்டும் நீரைப் ரசித்து
'கவிதை… கவிதை’ என்றேன்.
'துணியைக் 
காயப்போடும்முன் 
ஈரம் போக பிழியனும் னு கூடத் தெரியாது
? 
எருமை எருமை' என்றாள்.

No comments:
Post a Comment