Sunday, February 23, 2014
Wednesday, February 19, 2014
கண்ணீர்
போலீஸ்: ‘நிறுத்து நிறுத்து’
‘சார் நா என்ன வண்டியா ஓட்டுறே ?’
‘ஐயோ அசிங்கம் ... நிறுத்துப்பா’
‘ஆரம்பிச்சிட்டா என்னால நடுவுல நிறுத்த முடியாது சார்’
‘இவ பெரிய ... படிச்சவனா இருக்கே இப்புடி ஒன்னுக்கு போறியே ?’
‘சார் படிச்சவ ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ?’
‘படிச்சவ ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இல்லே, ஆனா ரோட்டுல ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இருக்கு’
‘சார் என்னோட துக்கம் ஒங்களுக்குத் தெரியாது சார்’
‘மூடு’
(வாய மூட)
‘ஐய, ஜிம்பப்போட சொன்னே’
‘சாரி சார்’
‘அசிங்கமா இல்லே ஒனக்கு‘
‘சார் காதலி வேணான்னு சொல்லிட்டு ஓடிட்டா சார்’
‘அதனால, அசிங்கமா இல்லே ஒனக்கு‘
‘சார் அழுது அழுது ....’
‘அசிங்கமா இல்லே ஒனக்கு‘
‘கண்ணுல தண்ணி வந்து டிராபிக் ஜாம் ஆகி’
‘அதனால ரோட்டுல ஒன்னுக்கு போவியா ?‘
‘சார் ... கண்ணீர் இடம் மாறி ஓடுது சார்’
‘சார் நா என்ன வண்டியா ஓட்டுறே ?’
‘ஐயோ அசிங்கம் ... நிறுத்துப்பா’
‘ஆரம்பிச்சிட்டா என்னால நடுவுல நிறுத்த முடியாது சார்’
‘இவ பெரிய ... படிச்சவனா இருக்கே இப்புடி ஒன்னுக்கு போறியே ?’
‘சார் படிச்சவ ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன ?’
‘படிச்சவ ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இல்லே, ஆனா ரோட்டுல ஒன்னுக்கு போகக்கூடாதுன்னு சட்டம் இருக்கு’
‘சார் என்னோட துக்கம் ஒங்களுக்குத் தெரியாது சார்’
‘மூடு’
(வாய மூட)
‘ஐய, ஜிம்பப்போட சொன்னே’
‘சாரி சார்’
‘அசிங்கமா இல்லே ஒனக்கு‘
‘சார் காதலி வேணான்னு சொல்லிட்டு ஓடிட்டா சார்’
‘அதனால, அசிங்கமா இல்லே ஒனக்கு‘
‘சார் அழுது அழுது ....’
‘அசிங்கமா இல்லே ஒனக்கு‘
‘கண்ணுல தண்ணி வந்து டிராபிக் ஜாம் ஆகி’
‘அதனால ரோட்டுல ஒன்னுக்கு போவியா ?‘
‘சார் ... கண்ணீர் இடம் மாறி ஓடுது சார்’
Wednesday, February 5, 2014
எதிரில் சிங்கம்
தூரத்திலிருந்துப் பார்த்தேன்
எதிரில் ... ஒரு சிங்கம்;
முறைத்தேன், முறைத்தது;
‘ஒரு கை பார்த்திடுவேன் உன்னை’
எச்சரித்தேன்;
‘நானும் ஒரு கை (கால்) பார்த்திடுவேன்’
சிங்கம் சிங்கத்தின் மொழியில் எச்சரித்தது;
கிட்டே போனேன்,
முட்ட வந்தது;
கண் நன்றாய்த் திறந்து பார்த்தேன் ...
என் முன்னாடி ....
முகம் பார்க்கும் கண்ணாடி;
..........
வந்ததே கோபம் எனக்கு;
மியாவ் என்று கர்ச்சித்து
திரும்பத் தூங்கிவிட்டேன்;
எதிரில் ... ஒரு சிங்கம்;
முறைத்தேன், முறைத்தது;
‘ஒரு கை பார்த்திடுவேன் உன்னை’
எச்சரித்தேன்;
‘நானும் ஒரு கை (கால்) பார்த்திடுவேன்’
சிங்கம் சிங்கத்தின் மொழியில் எச்சரித்தது;
கிட்டே போனேன்,
முட்ட வந்தது;
கண் நன்றாய்த் திறந்து பார்த்தேன் ...
என் முன்னாடி ....
முகம் பார்க்கும் கண்ணாடி;
..........
வந்ததே கோபம் எனக்கு;
மியாவ் என்று கர்ச்சித்து
திரும்பத் தூங்கிவிட்டேன்;
Saturday, February 1, 2014
உறங்க விடு
ஏன் இப்படி ...
என்னைச் சுற்றியே வருகிறாயே ...
கை கால் இடை முகம் எல்லாவிடமும்
நீ முத்தமிட்டத் தடம்
ஒரு சின்ன இடுக்கு கிடைத்தாலும் போதும்,
நுழைந்து விடுகிறாய்.
காலையில் கண்டுகொள்ளமாட்டாய்,
இரவில் தூங்கவிடமாட்டாய்;
சத்தமில்லாது வருவாய்,
சங்கீதம் இசைப்பாய்;
சங்கடத்தில் நெளியவைப்பாய்.
விழி விரித்துத் தேட
உனைக் காணாது விளிக்கும்,
நெஞ்சம் படபடக்கும்;
இன்றாவது எனைத் தூங்கவிடு;
என் உறக்கம் கலைக்காது எனை உறங்க விடு .... கொசுவே;
என்னைச் சுற்றியே வருகிறாயே ...
கை கால் இடை முகம் எல்லாவிடமும்
நீ முத்தமிட்டத் தடம்
ஒரு சின்ன இடுக்கு கிடைத்தாலும் போதும்,
நுழைந்து விடுகிறாய்.
காலையில் கண்டுகொள்ளமாட்டாய்,
இரவில் தூங்கவிடமாட்டாய்;
சத்தமில்லாது வருவாய்,
சங்கீதம் இசைப்பாய்;
சங்கடத்தில் நெளியவைப்பாய்.
விழி விரித்துத் தேட
உனைக் காணாது விளிக்கும்,
நெஞ்சம் படபடக்கும்;
இன்றாவது எனைத் தூங்கவிடு;
என் உறக்கம் கலைக்காது எனை உறங்க விடு .... கொசுவே;
Subscribe to:
Posts (Atom)