சிலது பின்னால் நன்றாயிருக்கும்
சிலது முன்னால் நன்றாயிருக்கும்
சிலது பின்னால் பார்த்தால் முன்னால் பார்க்கத் தூண்டும்
சிலது முன்னால் பார்த்தால் பின்னால் பார்க்கத் தூண்டும்
சிலது சகிக்காது;
சிலது பார்த்தாலே பரவசம்;
வளைந்தால் மனது பதறும்;
வர்ணம் வசீகரிக்கும்;
வாசம் வீசும்;
சிலது பார்த்தாலே படிக்கத்தோன்றும்;
சிலது பார்த்தாலே படுக்கத்தோன்றும்;
சிலது படித்துக்கொண்டே இருக்கத்தோன்றும்;
சிலது முடித்தபின் மீண்டும் படிக்கத் தோன்றாது;
சிலது வணங்க மட்டும், படிக்க முடியாது;
சிலது படிக்கையில் சிரிக்க வைக்கும்;
சிலது படிக்கையில் அழுக வைக்கும்;
நெட்டையாய்ச் சிலது
குட்டையாய்ச் சிலது
குண்டாய்ப் பலது
மொத்தத்தில் பலவிதம்
.........
.........
.........
புஸ்தகம்;
படித்தால் வளம் பெரும் அகம்;
எழுத்து போகும்போதே இது பெண்ணைப் பற்றியல்ல என்று உணர்த்திவிடுகிறது.அதே போல இறுதிவரி உபதேசமும் நேர்த்திக்கு உறுத்தலாய் இருக்கிறது விஸ்வநாத்.
ReplyDeleteஇன்னும் நெருக்கிப் பாருங்கள். உங்கள் எழுத்தில் ஓர் கவிதை ஒளிந்திருக்கிறது நிச்சயம்.