நீல வானம் 
வெள்ளை நிலவு 
மின்னும் நட்சத்திரம் 
அமைதியான பூமி 
செழித்த வயல்கள் 
அடர்ந்த பயிர்கள் 
இருமருங்கும் தென்னை மரம் 
நடுவில் நான் 
எனைச்சுற்றி என்னென்னவோ, ஏராளமாய்.
நான் சொல்லவருவதை 
செவிமடித்துக் கேட்க,
இல்லை கேட்பதுபோல் 
பாசாங்கு செய்ய.
ஆரவாரமாய்ப் பேச 
ஆர்வமில்லாது,
அமைதியாய் இருக்கிறேன்.
சொல்ல நான்யார் ?
ஒன்றும் புரியாது 
முழிக்கின்றனர்,
பின் மெதுவாய்க் 
கலைகின்றனர்
அடுத்த நாளை நோக்கி;
No comments:
Post a Comment