சல்லிக்கட்ட நடத்த சொல்லி
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
பதான்கோட் பயங்கரம் பத்தி 
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
வெள்ள நிவாரணம் ஒழுங்கா கொடுக்கச் சொல்லி 
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
ஸ்டிக்கர் ஒட்டுனத எதிர்த்து ஸ்டேடஸ் போட்டு,
வெள்ளத்த பாத்து மிரட்டி (மிரண்டு)
ஒரு ஸ்டேடஸ் போட்டு,
சட்டையில்லாத சல்மானே ... ன்னு சில பல கேள்வி கேட்டு 
ஸ்டேடஸ் போட்டு,
ஏதோ சொன்ன அமிர்கான 
எதிர்த்து ஒரு ஸ்டேடஸ் போட்டு,
நிர்பயா கொலையாளிய வெளிலவிட 
நீதி வாங்கிய நிதி எவ்ளோன்னு கேட்டு 
ஒரு ஸ்டேடஸ் போட்டு
தாமிரபரணி தண்ணிய திருடும் பெப்சி கம்பெனியையு 
அதுக்கு முன்னால நடந்ததெல்லாத்தையும் மறந்து 
எப்டியோ நம்ப சமுதாயக் கடமையாற்ற 
உதவிய FB க்கு நன்றின்னு 
ஒரு ஸ்டேடஸ் போட்டு
அடுத்து என்ன நடக்கும்னு 
ஆவலோட காத்திருக்கும் உங்களுள் நானும் ஒருவன்.
No comments:
Post a Comment