மழை
இதே மழை தான்
இந்த மழையில்தான் ஒருநாள் ...
விடுவிடுவென்று
என்னறைக்கு வந்தவள்
கொதிக்கும் எண்ணெயிலிட்ட அப்பளம் போல்
பொங்க ஆரம்பித்தாள்.
'இப்போ எதுக்கு நீ எனக்கு பணம் கட்டுனே?'
'பின்ன நா கட்டாம யாரு கட்டுவா?'
'நா ஒன்ன கட்ட சொன்னேனா?'
'இன்னிக்கு கடைசி தேதி'
'என்ன பாத்து ஒனக்கென்ன பிச்சக்காரிமாதிரி தெரியுதா?'
'இப்போ என்னங்குறே நீயி'
'பக்கி பக்கி பொறம்போக்கு பன்னாடை'
'...'
'அறிவில்ல'
'...'
'இப்போ எதுக்கு கண்ணடிக்கிறே'
நான் கண்ணடிக்க...
'இந்த முத்தம் தர்றதெல்லா வேணா சொல்லிட்ட'
முத்தம் தர,
'பேசிக்கிட்டே இருக்கே இப்போ எதுக்கு கதவ மூடுறே ?'
....
இதே மழை நாளில் தான்
ஒருநாள்;