வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்.
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்.
வேதங்களின் வேர்,
திருநீறு பூசியத் தலைவன்,
செம்மையான மேனியில்
சொலிப்பவன்,
பறையொலி கேட்டே
பரவசமடைபவன்;
தெய்வங்களுக்கெல்லாம்
தெய்வமாய் நிற்பவன்
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.
கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.
கருணைக் கடல் அவர்,
கண்ணில் மை தீட்டியிருப்பார்,
கன்னி என் உள்ளத்தைக்
கவர்ந்தவர்,
கண்ணீர் பெருக ஆனந்தத்தில்
ஆழ்த்துபவர்
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.
நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும்.
நித்தம் மணவிழாக் கோலம் கொண்டவர்,
நிறைய அழகு உடையவர்,
நீங்காதென் மனதில்
நிறைந்தவர், அவ்வாறு
நீங்காது
நிறைந்தவர்
தென்னாட்டில் உள்ள
பெருந்துறைக் கடவுள்
என்றெல்லாம் நின்மகள்
எடுத்தியம்புவாள்.
( தொடரும் )
வணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்வையிட முகவரி
http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_5.html?showComment=1407198730380#c3047236352083437617
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-