Wednesday, December 5, 2012

கிருஷ்ணாஷ்டகம் 1




கண்ணா 
கார்மேக வண்ணா 
கம்சனையும் அவன் துணை சநுரணையும்
கொன்று எமைக் காத்த மன்னா,
வாசுதேவனின் வாரிசே,
தேவகிக்குக் கிட்டிய பரிசே, 
இவ்வுலகை ஆள்பவனே - பரந்தாமா 
உன் பாதம் பணிகிறேன் காத்தருள்வாய்.

மலர்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ளும்
மாதவா,
மாலை பல அணிந்த மாயவா,
கொலுசு அணிந்து எம்மனங்களைக் கொள்ளை கொண்ட கோவிந்தா,
கையில் ஆபரணம் பல அணிந்தக் கேசவா,
இவ்வுலகை ஆள்பவனே - பரந்தாமா 
உன் பாதம் பணிகிறேன் காத்தருள்வாய்.

கருத்த சுருட்டை முடி
முழுமதி போன்றுன் முகம்
காதுகளில் பளபளக்கும் குண்டலங்கள் 
ஒ ! பரந்தாமா !!
இவ்வுலகை ஆள்பவனே 
உன் பாதம் பணிகிறேன் காத்தருள்வாய்.

                                                                ( தொடரும் )






















No comments:

Post a Comment