Wednesday, June 22, 2011

திரையில் காதல் - 2

எதிரெதிரே இருவரும் நோக்கையில்

எடுத்துக்கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்


பெண் தன்வசம் இழப்பதை உணர்வாள்

காத்துலே சூடம் போல
கரையிரே ஒன்னாலே


வெளியே வேறு யாரிடமும் சொல்ல முடியாது,
தனக்குத் தானே

இதழ் பிரிக்காமல்
குரல் எழுப்பாமல்
நான் எனக்காக ஒரு பாடல் பாடிக்
கொள்வாள்

மனம் விரும்புதே
உன்னை உன்னை
மனம் விரும்புதே


ஒத்துக்கொள்வாள்

ரகசியமாய்
ரகசியமாய்
புன்னகைத்தால் பொருளென்னவோ ?


தெரிந்தே கேள்விக் கணை தொடுப்பாள்

என் மேல் விழுந்த மழைத் துளியே
நீ இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?


கேள்வியாலே பதிலுரைப்பான்

( தொடரும் )

அவள் ...