மழை இந்த மழை தான் இதே மழை தான் இந்த மழை நாளில் தான் ஒருநாள் கோபமாய் வந்தாள் அமரச்சொன்னேன், 'பேசாதே' என்றாள் கைக்குட்டை தந்தேன், 'தொடாதே' என்றாள் 'கோபமா ?' என்றேன், 'நிறைய' என்றாள் தேநீர் தந்தேன் மெல்ல அருந்தினாள் வெல்லப்பார்வை என்மேல் வீசினாள். மின்சாரம் நின்றது, இருள் சூழ்ந்தது மின்னல் வெட்டியது, தயாராய் இருந்தேன் இடியிடிக்க அய்யோ என்றவள் அலர அருகிலிருந்து பிடித்துக்கொண்டேன்.
அந்நேரம் பார்த்து 'பனியோ ? பனியின் துளியோ? உன் இதழ் மேல் என்ன ?' 'பனியோ? தேனோ ? நீ சுவைத்தால் என்ன?' என்று பாடல் ஒலிக்க ...
... ...
இதே மழை தான் இந்த மழையில் தான் ஒருநாள்.