காதலர் தினமாம் இன்று.
காதல் கவிதையொன்று
எழுதவேண்டுமென எண்ணிவிட்டேன்.
காதலனாய் நானே
இருந்துவிட தீர்மானித்துவிட்டேன்.
மணல் சூழ்ந்தக் கடற்கரை
பூக்கள் பூத்துக்குலுங்கும் பூங்கா
யாரும்நுழையா நூலகம்
இன்னும் சில இடங்கள்
பார்த்து வைத்துவிட்டேன்.
மெல்லவிழும் மழைச்சாரல்
கண்கவர் வண்ண வானவில்
கொஞ்சிப் பேசும் குயிலின் சத்தம்
காதலிக்கத் தக்கத்தருணங்கள்
கண்டுகொண்டுவிட்டேன்.
ஒற்றைச் சிவப்பு ரோஜா என்கையில்
சில பலக் காதல் கவிதைகள் நெஞ்சில்
பெண்மட்டும் கிடைத்தால் போதும்
காதலர்தினம் கொண்டாடலாம் நானும்.