Tuesday, February 16, 2016

மழை



மழை
இதே மழை தான்,
இந்த மழையில் தான்
ஒரு நாள்
......
பாடத்துல டவுட்டு, ஃப்ரண்டு ரூமுக்கு அழைச்சிட்டு போறியா ?
என்றவள் குறுஞ்செய்தி அனுப்ப,
நா சொல்லித்தாரே என்று நான் பதிலனுப்ப,
ஒனக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியும், 6 மணிக்கு வரே, பிக்கப் பண்றே என்று ஆணை வர,
.......
ஆறு மணிக்கு அழைத்துச் செல்கையில்,
'நா சொல்லித் தரமாட்டேனா?' என்று கேட்க,
'ஒனக்குப் புரியாதுடா' என்றவள் சொல்ல,
மேலே பேசாது அவளை இறக்கிவிட்டு அறை வாசலில் நான் காத்திருக்க,
அப்பொழுது பார்த்து மின்சாரம் மாயமாக
'மெழுகுவர்த்தி இருக்கா?' என்றிவள் கேட்க
'இரு வாங்கியாரே' என்று தோழி கடைக்குக் கிளம்ப,
'நீங்க இருங்க நா போய் வாங்கியாரே' என்று நான் சொல்ல
'இல்லடா ஒனக்குப் பத்தாது, நீயே போ' என்று என்னவள் தன் தோழியிடம் சொல்ல

நான் முறைக்க,
தோழி மறைய,

'என்ன நீ, என்ன நெனச்சிட்டிருக்க, எனக்கு புரியாதுங்கறே பத்தாதுங்கறே'
'பின்ன ஒனக்கு இப்போ வேறென்ன செய்யலாம்னு தெரிலேல்லே'
'என்ன சொல்றே'
'கும்மிருட்டு ... தனி அறை ... அழகான பொண்ணு ...’ என்றவள் பேசிக்கொண்டே கதவைத் தாளிட

கும்மிருட்டு சரி ... தனி அறை சரி ... அழகான பொண்ணுதா மெழுகுவர்த்தி வாங்க போயிட்டாங்களே' என நான் சொல்ல...
இருட்டில் அவள் செருப்பைத் தேட
...........
இதே மழையில் தான்
ஒரு நாளில்.