Wednesday, September 23, 2015

காதல் எப்போது பிரியும் ?



உன் நினைவை நெஞ்சில் சுமந்துத் திரியவும்
உன் பெயரையே தொடர்ந்து சொல்லிக் கிடக்கவும்
யாருமில்லாவிடத்தில் கண் கலங்கி நிற்கவும்,
'இனி மீண்டும் நீ சண்டைபோடுவாயா ? போடுவாயா ?'
என்று என்னையே கேட்டுக் கொள்ளவும்,
'மாட்டேன் மாட்டேன்' என்று வாய்விட்டு சொல்லி
கூட இருப்போரை திரும்பிப் பார்க்க வைக்கவும்,
வருவோர் போவோர் எல்லாம் அவளையே நினைவுபடுத்தவும்,

இன்னொருமுறை இத்தனையும் அனுபவிக்க ஆசை.
என் இப்போதைய காதல் எப்போது பிரியும் ?