Saturday, August 29, 2015

விளையாட்டுக்கள்



ஈரக் கையால் உன் இடை தொடுவதும்,
நீ குளிக்கையிலே கதவு தட்டி உன்னைக்
கலவரப்படுத்துவதும்,
கூந்தல் மலரை முகர்ந்துகொண்டே
தோள்மேல் சாய்வதும்,
புடவை கட்டையில் இடை புகுந்து
உனை இம்சிப்பதும்,
உனக்குப் பிடிக்காத
எனக்குப் பிடித்த
சில விளையாட்டுக்கள்.


Monday, August 3, 2015

பெண் சுதந்திரம்



கலர் கலராய்
தாவணி அணிந்தக் கன்னியர்,
கூந்தல் மணக்க
பூக்கள் சூடிய பூவையர்,
பூமி பார்த்த நடை,
வெட்கச் சிரிப்பு,
ஓரப் பார்வை,
மஞ்சள் பூசிய முகம்,
கள்ளமில்லா அகம்,
தோழியர் மூலம் சேதி சொல்லல்,
தினம் மாலையில் கோவிலுக்குச் செல்லல்,
வீட்டில் விளக்கேற்றி வைத்தல்
பாட்டு க்ளாஸ், நாட்டிய வகுப்பு
எல்லாம் போச்சி...
நல்ல வேலை எனக்கும் வயசாச்சு,

வாழ்க
பெண் சுதந்திரம்.