Friday, January 9, 2015

மழை

மழை
இதே மழை தான் ...
ஒரு நாள் ..... ஒரு கல்யாணத்தில்,
தனியே நான், மண்டபத்தில்
கொஞ்சும் அவள், என் சிந்தனையில் ;
மின்னலோ ..... தேவதையோ ?
இல்லை .... இல்லை ....
என்னவள்
மேகத்தினிடையே எனை மிதக்கவைப்பவள்
மண்ணிலிறங்கி  மழையில் நடந்து
என்முன்வந்து நின்றாள்;
மணப்பெண் ஃப்ரண்டா ?
ஃப்ரண்டோட ஃப்ரண்டு
சொல்லிருந்தா வண்டிலேயே வந்திருக்கலாம்ல ? என்றேன்
தலை நனஞ்சிருக்குல்ல, துண்டு தரலாம்ல ? என்றாள்
தனியே அவளை தள்ளிக்கொண்டு என் அறைக்கு வந்தேன்;
தலை துடைக்க துண்டெடுத்துத் தந்தேன்;
துடைச்சிவுடுறது என்றாள்
சிரித்துக்கொண்டே சேவை செய்தேன்;
கரும்பு தின்னக் கூலியா என்றெண்ணும் பொழுதில் ...
கதவு படபடவென அடிக்கப்பட,
நான் திறக்க ...
டிபன் ஆச்சி மாப்ளே, தூக்கம் ... சாரி யாரிவங் ...
கரடி ... கரடி
எனத் திட்டிக்கொண்டே
எனையும் இழுத்துக்கொண்டு
சாப்பாட்டுக்கூடம் சென்றாள் .
இதே மழை நாளில் தான்
ஒரு நாள் .....