Wednesday, December 9, 2015

வெல்கம் டூ 40



உனக்குள் ஒரு அமைதி வந்திருக்கும்.
உள்ளிருந்து ஏதோ ஒரு சத்தம்
'யார் நான்' என வினவும்.
இன்றைய இசையெல்லாம்
இரைச்சலாய்த் தெரியும்.
அடுத்த வீட்டுப் பைங்கிளி
அங்கிள் என்று அழைக்கும்.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும்.
கவலை வேண்டாம், வெல்கம் டூ 40

Tuesday, October 20, 2015

மழை

மழை
இதே மழை தான்
இதே மழை நாளில் தான்
ஒருநாள்.....

நானும் அவளும்
இருவருக்கும் பொதுவான
நண்பனின் அக்கா திருமணத்தில்....

இரவு ஏழு மணி இருக்கும்,
அமெரிக்க ரஷ்யா நல்லுணர்வு பற்றியும்
ஐரோப்பாவின் அசுர வணிக வளர்ச்சி பற்றியும்
மும்முரமாய் விவாதித்திக்கொண்டிருக்க

இடையிடையே நண்பனொருவன் எங்களை கலாய்த்துக் கொண்டிருக்க
கோபத்தில் என்னவள்
'ஏங்க இவ்ளோ பேசுறீங்களே, ஒங்களால இப்போ மெய்ன் ஆஃப் பண்ண முடியுமா?'
எனக் கேட்க
'அட எள்ளுன்னா எண்ணையா நிப்பா நம்பாளு' என்று நான் எத்திவிட
அடுத்த ஐந்து நிமிடத்தில் மின்சாரம் நின்று
அவ்விடம் இருள,
'கரண்டு வர அரை மணிநேரம் ஆவுமா..' என்றவள் செய்தி அனுப்ப
யாருமில்லாத் தனியரங்கில்..... பாடல் எங்கோ ஒலிக்க

இதே மழை நாளில் தான்
ஒரு நாளில்.

Wednesday, September 23, 2015

காதல் எப்போது பிரியும் ?



உன் நினைவை நெஞ்சில் சுமந்துத் திரியவும்
உன் பெயரையே தொடர்ந்து சொல்லிக் கிடக்கவும்
யாருமில்லாவிடத்தில் கண் கலங்கி நிற்கவும்,
'இனி மீண்டும் நீ சண்டைபோடுவாயா ? போடுவாயா ?'
என்று என்னையே கேட்டுக் கொள்ளவும்,
'மாட்டேன் மாட்டேன்' என்று வாய்விட்டு சொல்லி
கூட இருப்போரை திரும்பிப் பார்க்க வைக்கவும்,
வருவோர் போவோர் எல்லாம் அவளையே நினைவுபடுத்தவும்,

இன்னொருமுறை இத்தனையும் அனுபவிக்க ஆசை.
என் இப்போதைய காதல் எப்போது பிரியும் ?