குழந்தை போலத் தோற்றம் கொண்டான்,
குன்று போன்றத் தடைகளையும் நீக்க வல்லான்,
ஆனை முகத்தான்,
பரமசிவனால் ஆசிர்வதிக்கப்பட்டான்,
பிரம்மனும் இந்திரனும் தேவர்களால் துதிக்கப் பெற்றான்,
இன்னும் பலபுகழோடு
கணேசன் என்றழைக்கப் படுபவனே;
உன்னை வணங்குகிறேன். மங்களம் அருள்.
வார்த்தைகள் அறியேன்.
பிறர் உரைக்க புரிதலும் இயலேன்.
பாடல்கள் அறியேன்.
உன் புகழ் படித்தும் அறியேன்.
ஆறுமுகம் மட்டும் கண்ணில் தெரிந்தால் போதும்
கடலலை போல் வார்த்தைகள் பிறக்கும்,
கவிதைகள் மனதுள் பெருகும்,
பாடல்கள் பாடுகிறேன்;
உன் பாதம் பணிகிறேன். மங்களம் அருள்.
மகாதேவனின் மைந்தனே,
மயில்மேல் அமர்ந்திருப்பவனே,
மனதை மயக்கும் வடிவம் பெற்றவனே,
முனிவர்களின் மனதில் ஜொலிப்பவனே,
வேதங்களின் வித்தகனே, இவ்
உலகையெல்லாம் காப்பவனே;
உன் பாதம் பணிகிறேன். மங்களம் அருள்.
( தொடரும் )