இனி நான் காதலிக்கலாம்
யாரோ - அவள் வரும் பாதை பார்த்துக் காத்திருக்கலாம்
'அவள் வருவாளா ?' என்று பாடிக் கிடக்கலாம்
நெஞ்சம் படபடக்க பார்த்து ரசிக்கலாம்
பாவை பார்த்துச் சிரிக்க எங்கோ பறக்கலாம்
சம்மதித்தால் மடியில் தலை வைத்துத் தூங்கலாம்
அவள் தலை கோத குறும்பு செய்யலாம்
பரிசு தந்து பரவசிக்கலாம்
முத்தம் தந்து முறைக்க வைக்கலாம்
கவிதை பல கிறுக்கலாம்
கவிதை பல கிறுக்கலாம்
ஆம்,
நேற்றே என் (பழைய) காதலிக்கு
இன்னொரு ஆணுடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது;
விடுதலை ...விடுதலை ...விடுதலை ...