எப்படி இருக்கே ?
எப்படி இருக்கே
என் பழைய காதலா ?
நலமா ?
நம் காதல்
எப்போவாச்சு
ஞாபகம் வருமா ?
உன்
உறவாகிப் போன நம்
உறவெல்லாம் நலமா ?
எப்பவும்
என்னை மொறச்சி மொறச்சி பார்க்கும்
எழுமலை அண்ணன்
எப்புடி இருக்கார் ?
காரணமே இல்லாமக்
கண் கலங்கும்
உன் அம்மா,
கட்டாந்தரையில்
நீச்சலடிக்க
பயப்படும் உன் தம்பி
இருவரும் நலமா ?
என்னை நீ அடிச்சதும்
உன்னை விட்டு ஓடி போன
உன் நாய்
வந்துச்சா திரும்பி ? பழகுதா ஓண்ட
விரும்பி ?
செத்ததெல்ல யாருன்னு
நீ சொல்லு;
பிழைச்சி இருக்குற
உறவெல்லாம்
நா சொல்றே;
ஓடிப்போன
ஒங்கக்கா புருச
திரும்பி வந்ததா கேள்விப்பட்டே,
அதெல்லா சரி,
கொண்டு போனத
கொண்டு வந்தாரா ?
கொஞ்சம் கூட
மிச்சம் வைக்காம
முழுதும் சொல்லிடு;
என் அக்கா மீண்டும்
முழுகாம இருக்கா,
நீ வெலகி இருந்தப்போ
இரண்டு பெத்தா;
தங்கச்சி புருச
தண்ணி போடுறா,
தட்டிக் கேட்டா
தடிய எடுக்கிறா,
தப்பு பண்ணிட்டோன்னு
தலைல
அடிச்சி
அழுவுறா
ஆத்தா.
இன்னு சொல்ல,
ஒன்ட கேட்க
ஏராளம் இருக்கு
என்ட;
ஏன் பிரிஞ்சோ
இன்னு புரியலே,
விடிஞ்சதெதற்குன்னு
தெரியலே,
விடியாம இருந்தா
நா அழுவுறது
ஊருக்கு தெரியாதில்லே.
ஒன்னே நெனச்சே
ஒத்தையிலே
ஒக்காந்து இருக்கே,
ஒ நெனப்புலியே
தவிச்சி போய் கிடக்கே;
ஒரே ஒரு முறை
என்னை பாக்க
வருவியா ?
கவிதை ரெம்ப நல்ல இறுக்கு, இதுபோல இன்னும் காதல் கவிதை எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ரமேஷ்.
ReplyDelete