தையொரு திங்களும் தரைவிளக்கித்
தன்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே
தை மாதம் எல்லா நாளும்
தரை சுற்றம் தூய்மையாக்கிக்
கோலமிட்டு,
மாசியின் முதல் பாதியில்
எமை ஆசிர்வதிக்க
எம்பெருமான் வரும் பாதை
எங்கும்
ஏராளமாய் அலங்கரித்து
நடந்து வர ஏதுவாக
நுண்ணிய மணல்
நிரப்பி,
காம தேவன் வந்ததும்
அமர வைத்து
அவனையும்
அவன் தம்பியையும் வழிபட,
அவ்விருவரும் எனை
சக்ராயுதம் ஏந்திய
அந்தத் திருவேங்கடமுடையானுக்கு
சேவை செய்ய
அருள் கிடைக்க
ஆசிர்வதிப்பர்;
No comments:
Post a Comment